Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'கெளரவம்' சிவாஜி மாதிரி தங்களுக்குள் பிரிந்து வாதாடி "ஒர்க் அவுட்" செய்த ஜெ. வக்கீல்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவாஜி கணேசன் நடித்த கெளரவம் படம் பார்த்திருப்பீர்கள். அதில் கோர்ட்டில் தான் வாதாடப் போவதை தனது வீட்டில் உள்ளவர்களையே வைத்து ஒத்திகை பார்த்து விட்டு கோர்ட்டுக்குப் போவார் "பாரிஸ்டர் ரஜினிகாந்த்" சிவாஜி. கிட்டத்தட்ட அதேபோல ஜெயலலிதாவின் அப்பீல் மனு மீதான விவாதத்தையும், தங்களுக்குள் பிரிந்து வாதாடி, பிழைகளைச் சரி செய்து கொண்டு கோர்ட்டில் இந்த வழக்கை சந்தித்துள்ளனராம் அதிமுக வக்கீல்கள்.

சீனியர் வக்கீல் குமார் தலைமையிலான 25 பேர் கொண்ட வக்கீல்கள்தான் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்காக ஆஜாராகினர். இப்போது வெற்றியும் பெற்றுள்ளனர்.

ஜெயலலிதா சந்தித்த மிகப் பெரிய சவாலுக்குரிய வழக்கு இதுதான். இந்த வழக்கிலிருந்து மீண்டு வருவதற்குள் அவருக்குப் போதும் போதும் என்றாகி விட்டது. தீர்ப்பு எப்படியோ, இந்த வழக்குக்காக அதிமுக வக்கீல்கள்தான் அங்குமிங்கும் ஓடி ஓடி புயலாக வேலை செய்துள்ளனர்.

25 வக்கீல்கள்

25 வக்கீல்கள்

அதிமுகவைச் சேர்ந்த 25 வக்கீல்கள் ஜெயலிதா அன் கோவுக்காக வேலை பார்த்துள்ளனர். இத்தனை வருட வக்கீல் வாழ்க்கையில் கடந்த 6 மாதத்தில்தான் இவரக்ள் பேயாக வேலை பார்த்துள்ளனர்.

பிரித்து மேய்ந்தனர்

பிரித்து மேய்ந்தனர்

ஜெயலலிதாவுக்கு தண்டனை கொடுத்து அவருக்கு சிறை தண்டனை விதித்து பின்னர் சுப்ரீம் கோர்ட்டில் அவருக்கு ஜாமீன் கிடைத்த பின்னர், அப்பீல் மனுவில் வெற்றி பெற உத்திகள் வகுக்கப்பட்டன. 25 வக்கீல்களையும் இதற்காக பிரித்துள்ளனர்.

இரவு பகலாக வேலை

இரவு பகலாக வேலை

சென்னை மற்றும் பெங்களூரில் இருந்தபடி இவர்கள் தீவிரப் பணியாற்றியுள்ளனர். ஜெயலலிதா மீதான வழக்கை உடைக்க என்னவெல்லாம் தேவையோ அந்தப் பாயிண்டுகளையெல்லாம் திரட்டியுள்ளனர்.

குன்ஹா தீர்ப்பில் எங்கே ஓட்டை

குன்ஹா தீர்ப்பில் எங்கே ஓட்டை

குன்ஹா அளித்த தீர்ப்பில் எங்கெல்லாம் ஓட்டை இருக்கிறது என்பதை கண்ணில் விளக்கெண்ணெய் விடாத குறையாக கண்டுபிடித்தனர். அவற்றையெல்லாம் தொகுத்தனர். முக்கியப் பாயிண்டுகளை தனியாக தொகுத்தனர். ஜெயலலிதாவுக்கு சாதகமான விஷயங்களைத் தனியாக தொகுத்தனர்.

அவர்களுக்குள் விவாதம்

அவர்களுக்குள் விவாதம்

பின்னர் வழக்கறிஞர் செந்தில் தலைமையில் இவர்கள் இவர்களுக்குள்ளாகவே பிரிந்து வாதிட்டுப் பார்த்துள்ளனர். அதில் நெருடலாக வந்தவற்றை தனியாக தொகுத்து அவற்றை சரி செய்யும் முயற்சியில் ஒரு குழு இறக்க விடப்பட்டது.

சரி எது தவறு எது

சரி எது தவறு எது

அதன் பின்னர் ஜெயலலிதா தரப்பி்ல சாதகமாக உள்ளவை எவை, பாதகமாக உள்ளவை எவை என்பதை பிரித்து அதை வைத்து இரு தரப்பாக பிரிந்து அதை சரி செய்துள்ளனர்.

சீனியர்கள் கேட்க.. இவர்கள் சொல்ல

சீனியர்கள் கேட்க.. இவர்கள் சொல்ல

எல்லாவற்றையம் சேகரித்து முடித்த பின்னர் சீனியர் வக்கீல்களான குமார், நாகேஸ்வர ராவ் ஆகியோர் இந்த வக்கீல்களிடம் பல கேள்விகளைக் கேட்டு ஒத்திகை பார்த்துள்ளனர். அவர்களின் கேள்விகளுக்குப் பதில் இல்லாதவற்றை தனியாக தொகுத்து அதற்கும் பதில் தேடியுள்ளனர்.

சேலம் செந்திலுக்கே முழுப் பெருமையும்

சேலம் செந்திலுக்கே முழுப் பெருமையும்

வழக்கறிஞர் செந்தில் தான் இந்தக் குழுவினரை திறம்பட வேலை வாங்கியுள்ளார். புயலாக வேலை பார்த்துள்ளார். சேலத்தைச் சேர்ந்தவர் இவர். வக்கீலாக இவர் கடந்த 17 வருடமாகத்தான் பணியாற்றி வருகிறாராம். அதாவது இந்த வழக்கைப் பொறுத்தவரை இவர் ஜூனியர் என்பது குறிப்பிடத்தக்கது (19 வருட வழக்கு இது)!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+