ஃபேஸ்புக்ல போடுறது எல்லாம் உங்க கருத்துதானா? ஸ்டாலினிற்கு முதல்வர் ஜெயலலிதா கேள்வி
சென்னை: திமுக பொருளாளர் ஸ்டாலின், அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் அவருடையது தானா என்பதை ஸ்டாலின் விளக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் கூறியுள்ளார்.
காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று சட்டசபையில் நடைபெற்றது. சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குறித்த தகவல்களை ஸ்டாலின் திரித்து ஃபேஸ்புக் பக்கத்தில் கூறிவருகிறார்.உண்மையிலேயே அவரது கருத்துகள் தானா என்பதை, அவர் விளக்கிட வேண்டியது அவசியம்.

கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின் போது ஸ்டாலின் அவரது ஃபேஸ்புக் பதிவின் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆனால், திமுகவின் தலைமைக் கழகம் அதற்கு மறுப்பு தெரிவித்து ஸ்டாலின் இணைய தளத்தை பராமரிக்கின்ற சில தோழர்கள் வெளியிட்டுள்ளனர் என்றும், இந்த வாழ்த்துச் செய்தி ஸ்டாலினின் விருப்பப்படி ஆனதில்லை என்றும் தெரிவித்து ஒரு விளக்கத்தை அளித்தது. சட்டம் ஒழுங்கு பற்றி ஸ்டாலின் பேஸ்புக்கில் வெளி வந்த பதிவுகளும் மற்றவர்களுடைய கருத்துகள் தானோ என்னவோ? என்று ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா அதிமுக ஆட்சியில் காவல்துறைக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிட்டார்.சட்டம் ஒழுங்கை சீராக பராமரிக்கப்பதில் நாட்டிலேயே முதல் மாநிலம் தமிழகம்தான் என அசோசெம் தாக்கல் செய்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
திமுக ஆட்சிக்காலத்தில் காவல்துறைக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை திமுக உறுப்பினர் வேலு சுட்டிக்காட்டினார். ஆனால் திமுக ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட ஆணையங்களின் சிறந்த பரிந்துரைகளையே அந்த அரசு ஏற்கவில்லை என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். காவல்நிலையத்திற்குள் அரசியல்வாதிகள் செல்வதை தவிர்க்கும் நெறிமுறைகள் வகுக்கப்படவேண்டும் என்று காவல் ஆணையம் செய்த பரிந்துரையை திமுக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications