ஜெயலலிதாவின் தொகுதியான ஸ்ரீரங்கத்தில் பதட்டம்: கடைகள் அடைப்பு
திருச்சி: சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களூர் நீதிமன்றம் அறிவித்தபிறகு அவரது சொந்த தொகுதியான ஸ்ரீரங்கத்தில் பதட்டம் நிலவுகிறது.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக 18 ஆண்டுகளாக நடந்த சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று அறிவித்தது.
ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட பிறகு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் கல்வீச்சு, கடையடைப்பு செய்வதுமாக உள்ளனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் சொந்த தொகுதியான ஸ்ரீரங்கத்தில் பதட்டம் நிலவுகிறது.
ஸ்ரீரங்கம் கோவிலை சுற்றியுள்ள கடைகளை அடைக்குமாறு அதிமுகவினர் மிரட்டினர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. திருச்சியில் அதிமுகவினர் பேருந்து மீது கல்வீசித் தாக்கியதில் 4 பேர் காயம் அடைந்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேருந்துகள் தாக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications