தொடரும் கல்தா: அதிமுக நிர்வாகிகள் 2 பேரை கட்சியில் இருந்து நீக்கிய ஜெயலலிதா
சென்னை: கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி கழகச் செயலாளர் பாலசுப்பிரமணி மற்றும் பெரம்பூர் பகுதி எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் லயன் ரவிச்சந்திரன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், வட சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணி, (ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர்), லயன் ரவிச்சந்திரன் (பெரம்பூர் பகுதி எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர்) ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தை துவங்கும் முன்பு கட்சியில் உள்ள சிலரை நீக்கும் வேலையை ஜெயலலிதா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த இரண்டு பேரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். முன்னதாக எம்.எல்.ஏ. பழ. கருப்பையாவை கட்சியில் இருந்து நீக்கி முதல்வர் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications