'சிட்டவுன் ப்ளீஸ்.. வாட்ஸ் யுவர் நேம்'.. 7 பேரை இன்டர்வியூ செய்த ஜெ.!
சென்னை: அதிமுக சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான நேர்காணலை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி விட்டார்.
முதல் நாளில் அவர் 7 பேரைக் கூப்பிட்டு நேர் காணல் நடத்தியுள்ளார்.
மற்ற கட்சிகளை விட முதல் ஆளாக அதிமுக தனது நேர்காணலை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

4537 விருப்ப மனுக்கள்
அதிமுக சார்பில் சீட் கேட்டு கடந்த மாதம் 4537 பேர் விருப்ப மனு கொடுத்திருந்தனர்.

நல்ல வசூல்
விருப்ப மனுக்கள் தலா ரூ. 25,000க்கு விற்கப்பட்டன. இந்த விருப்ப மனு விற்பனை மூலம் கட்சிக்கு ரூ. 11.34 கோடி அளவுக்கு வசூலானது.

ஆளுக்கு 3 பேர்
விருப்ப மனு பெறப்பட்டதைத் தொடர்ந்து, ஒவ்வொரு தொகுதிக்கும் 3 வேட்பாளர்கள் பெயர்களை மாவட்ட செயலாளர்களிடமிருந்து பெற்றார் ஜெயலலிதா. அதன் பின்னர் இந்த வேட்பாளர்கள் குறித்து ரகசிய விசாரணையும் நடத்தப்பட்டதாம். அதில் பலர் அடிபட்டுப் போனதாக தெரிகிறது. அதிலும் தேறி வந்தவர்கள் பட்டியலுடன் தற்போது நேர்காணலைத் தொடங்கியுள்ளார் ஜெயலலிதா.

நேற்று 2 தொகுதிகளுக்கு
நேற்று முதல்வர் ஜெயலலிதாவே நேர்காணலை நடத்தினார். முதல் நாளான நேற்று காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதிகளுக்கான நேர்காணல் நடந்தது.

7 பேரிடம்
இந்த நேர்காணலில் சீட் கேட்டு விண்ணப்பித்த 7 பேர் கலந்து கொண்டனர்.

போயஸ் தோட்டத்தில்
முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தில் வைத்து நேர்காணல் நடத்தப்பட்டது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications