15ம் தேதி தேய்பிறையில் முதல்வராக பதவியேற்கும் ஜெ.: அமைச்சரவையில் லேசான மாற்றம்?
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலையானதைத் தொடர்ந்து, தமிழகத்தின் முதல்வராக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வரும் 15ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அன்றைய தினம் தேய்பிறையாக இருந்தாலும் வைகாசி பிறப்பு முகூர்த்த நாளாகவும் இருப்பதால் முதல்வராக பதவியேற்க ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மீண்டும் முதல்வராக பதவியேற்கும் தினத்தில் அமைச்சரவையில் சிறிய அளவிலான மாற்றமும் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரையும் சென்னைக்கு வருமாறு அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இந்த நிலையில் ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மே 13-ஆம் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் எனத் தெரிகிறது. இதில், அதிமுகவின் சட்டப்பேரவை குழு தலைவராகவும், முதல்வராகவும் ஜெயலலிதாவை அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் ஒரு மனதாகத் தேர்வு செய்ய உள்ளனர்.
அதைத் தொடர்ந்து, தமிழக ஆளுநர் கே.ரோசய்யாவைச் சந்தித்து, முதல்வர் தேர்வுக்கான கடிதத்தை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கொடுப்பர்.

ராஜினாமா செய்யும் ஓ.பி.எஸ்
இதற்கிடையில் முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்வார். இதனையடுத்து வரும் 15ஆம் தேதி ஜெயலலிதா முதல்வராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் 14ஆம் தேதியன்று மகம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம நாளாகும்.

வைகாசி பிறப்பு
மே 15ஆம் தேதி தமிழ் மாதமான சித்திரை முடிந்து வைகாசி பிறக்கிறது. வெள்ளிக்கிழமை நாளான அன்று துவாதசி திதி, ரேவதி நட்சத்திரம், அமிர்தயோகமாகும். தேய்பிறையில் பதவியேற்பது சிறந்தது என்று ஜோதிடர்கள் ஆலோசனைகள் கூறியுள்ளதாக போயஸ் தோட்டத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

நான்கு ஆண்டுகள் நிறைவு
இதனிடையே 2011 மே 16ஆம் தேதி அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த நாள். சரியாக நான்கு ஆண்டுகள் முடிந்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நேரத்தில் ஆட்சிக்கட்டிலில் முதல்வராக அமர்ந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறாராம் ஜெயலலிதா. எனவேதான் 17ஆம் தேதிக்கு பதிலாக 15ஆம் தேதியே முதல்வராக பதவியேற்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீர்ப்பு நாள்
2011 மே 13ஆம் தேதிதான் தேர்தல் முடிவுகள் வெளியாயின. போயஸ் கார்டனே திருவிழா கோலமாக அப்போது காட்சி அளித்தது. அதைவிட உற்சாகம் இந்த மே 11ஆம் தேதி அரங்கேறியது. ரிசல்ட் தினத்தை தீர்ப்பு தினம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது என்கின்றனர்.

அமைச்சரவை மாற்றம்
ஜெயலலிதா முதல்வர் ஆக பதவியேற்கும் போது சில அமைச்சர்கள் கழற்றிவிடப்படலாம். புதியவர்கள் சேர்க்கப்படலாம். புதிய அமைச்சரவை பதவி ஏற்பை ஐந்தாம் ஆண்டு ஆட்சி தொடங்கும் நாளான மே 16-ஆம் தேதி வைத்துக்கொள்ள முதலில் முடிவு செய்தார்களாம். ஆனால் அன்று சனிக்கிழமை கரிநாள் என்பதால் அதற்கு முதல்நாளே பதவியேற்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எகிறும் எதிர்பார்ப்பு
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான கொண்டாட்டத்தைத் தாண்டி புதிய அமைச்சரவை தேதியும் அமைச்சர்கள் பட்டியலும்தான் தற்போது அதிக எதிர்ப்பார்ப்பை கூட்டியிருக்கிறது. அதேநேரத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்க இருப்பதால் அமைச்சரவை பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

திக் திக் மனநிலையில்
தனியாக இடைத்தேர்தல் நடத்துவதைவிட இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் சூட்டுடன் பொதுத்தேர்தலை நடத்திவிட்டால் என்ன என்றும் ஜெயலலிதா நினைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்குமோ? யார் தலை உருளப்போகிறதோ என்று திக் திக் மனநிலையோடு உள்ளனர் அமைச்சர்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications