அமோக வெற்றி பெற வைத்த ஆர்.கே. நகர் வாக்காள பெருமக்களுக்கு நன்றி, நன்றி, நன்றி: ஜெ.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தன்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ததற்காக முதல்வர் ஜெயலலிதா வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே அதிமுக வேட்பாளரான ஜெயலலிதா முன்னிலை வகித்து வருகிறார். இந்த தேர்தலில் அவர் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுயிருப்பதாவது,
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த வாக்காள பெருமக்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் என் மீது வைத்துள்ள பாசத்திற்கு நன்றி.
வாக்காளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் செயல்படுவேன். வாக்காள பெருமக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்ப பாடுபடுவேன். நான் வெற்றி பெற பாடுபட்ட தோழமை கட்சி தலைவர்கள், கட்சி தொண்டர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக நடந்த ஆர்.கே. நகர் தேர்தலில் வெற்றி கிடைத்துள்ளது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications