இயல்பு நிலைக்கு வேகமாக திரும்புகிறார் ஜெயலலிதா.. நிற்க, நடக்க பயிற்சி
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நிற்கவும், நடக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை: நீர் சத்து குறைபாடு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவற்றில் இருந்து குணமாகிய நிலையில் அவருக்கு நிற்கவும், நடக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவசரசிகிச்சை பிரிவில் இருந்து நவீன வசதிகள் அடங்கிய சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மருத்துவர் கண்காணிப்பில் நிற்கவும், நடக்கவுமான சிறிய சிறிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 69-வது நாளாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 22ம் தேதி இரவு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை ஆயிரம் விளக்கு கீரிம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவ நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் அண்மையில் உடல் நலம் தேறி அவசர வார்டில் இருந்து சாதாரண வார்டுக்கு அவர் மாற்றப்பட்டார்.
தற்போது அவருக்கு அளிக்கப்பட்டு வரும் நடை மற்றும் நிற்றல் பயிற்சி அடுத்த சில நாட்களுக்கு வழங்கப்படும் என்றும் அதன் பின்னர் மருத்துவமனையில் இருந்து முதலமைச்சர் ஜெயலலிதா வீடு திரும்புவது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலமைச்சரின் உடல்நலம் குறித்து வெள்ளிக்கிழமை பேசிய மருத்துவமனை சேர்மன் பிரதாப் ரெட்டி, ஜெயலலிதா இரண்டு மூன்று நிமிடங்கள் இயல்பாக பேச்சுக் கொடுப்பதாக தெரிவித்திருந்தார்.
மேலும், முதலமைச்சருக்கு தொடர்ந்து சில சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அவருக்கு அனைத்து உடல் உறுப்புகளும் இயல்பாக இயங்குவதாகவும், நீர் சத்துக்குறைபாடு போன்ற நோய்கள் குணமாகி விட்டதாகவும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதாப்ரெட்டி குறிப்பிட்டிருந்தார்.
முதலமைச்சர் ஜெயலலிதா மிகவும் பலம் வாய்ந்த முதலமைச்சர் என்றும் அவரது உடல்நிலை குணமடைந்து விட்டதாகவும் தெரிவித்த பிரதாப் ரெட்டி வீடு திரும்புவது குறித்து தானோ, சுகாதாரத் துறை அமைச்சரோ அல்லது செயலாளரோ
தீர்மானிக்க வேண்டியதில்லை, ஜெயலலிதாவே தீர்மானித்துக் கொள்வார் என்றும் கூறியிருந்தார்.
முதலமைச்சர் வீடு திரும்புவதில் அவசரம் காட்டவில்லை என்றும் அவருக்கு உடல் நலம் திருப்தியாக இருப்பதாக உணரும் பட்சத்தில் அவர் வீட்டிற்கு செல்லலாம் என்றும் பிரதாப் ரெட்டி தெரிவித்தார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications