செங்கோட்டை வீர வாஞ்சிநாதன் மணிமண்டபம்.. நாளை திறக்கிறார் ஜெ.
செங்கோட்டை: செங்கோட்டையில் கட்டப் பட்டுள்ள வீர வாஞ்சி நாதன் மணிமண்டபத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா நாளை மதியம் 12 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் தலைமை செயலகத்திலிருந்து திறந்து வைக்கிறார்.
இந்திய சுதந்திரத்திற்காக முதன் முதலில் ஆயுதம் ஏந்திஅப்போதைய நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷ் துறையை மணியாட்சி ரயில்நிலையத்தில் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் களச்சாவு அடைந்த செங்கோட்டையை சார்ந்த வீரவாஞ்சிநாதனின் தியாகத்தை போற்றும் வண்ணம் அப்போதைய முதல்வர் காமராஜர் செங்கோட்டை முத்து சாமி பூங்காவில் வீரவாஞ்சி நாதனுக்கு மணி மண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டினார்.

அதன் பின் அதனை அனைவரும் மறந்த நிலையில் இப்பகுதி மக்கள்,வாஞ்சி இயக்கம்,என பல்வேறு அரசியல் கட்சிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்ததைத் தொடர்ந்து கடந்த ஆட்சியில் ரூபாய் 50இலட்சம் செலவில் வீர வாஞ்சி நாதனுக்கு மணிமண்டபம் அமைக்க முடிவு செய்து நிதியும் ஒதுக்கப் பட்டு பணிகள் நடந்து முடிந்தன.

கடந்த சில ஆண்டுகளாகவே திறப்பு விழாவுக்கு காத்திருந்த மணிமண்டபத்தை தமிழக முதல்வர் நாளை மதியம் 12.மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் தலைமை செயலகத்திலிருந்து திறந்து வைக்கிறார்.
இதற்க்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்தினர் செங்கோட்டையில் தொடங்கியுள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications