தேர்தல் அதிகாரி சக்சேனா உதவியுடன் ஜெ. அமோக வெற்றி பெறுவார்: ஈ.வி.கே.எஸ்.
மதுரை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவின் உதவியுடன் முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெறுவார் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றது. இதில் துவக்கத்தில் இருந்து அதிமுக வேட்பாளரான முதல்வர் ஜெயலலிதா முன்னிலை வகித்து வருகிறார்.

இந்நிலையில் இடைத்தேர்தல் பற்றி தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
டெல்லியை விட சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணம் அதிகமாக உள்ளது. டெல்லியில் 11 கிலோமீட்டருக்கு ரூ.19 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் அதே தூரத்திற்கு ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணத்தை குறைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அதிமுக செயலாளர் போன்று செயல்பட்டு வந்தார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பல ஊழல்கள் நடந்துள்ளது. இது ஒன்றும் முறையாக நடந்த தேர்தல் இல்லை.
இடைத்தேர்தலில் சந்தீப் சக்சேனா உதவியுடன் ஜெயலலிதா அமோக வெற்றி பெறுவார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது. பெண்களால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. பெண்களுக்கு அதிக அளவில் பாலியல் தொல்லை அளிக்கப்படுகிறது. மாநிலத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது என்றார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications