மே 23- பிற்பகலில் ஜெ. முதல்வராக பதவியேற்கிறார்... சி.ஆர். சரஸ்வதி தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணா தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக மே 23-ந் தேதி பிற்பகல் பதவியேற்க இருப்பதாக அக்கட்சியின் பேச்சாளர் நடிகை சி.ஆர். சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் மே 22-ந் தேதி காலை 7 மணிக்கு அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் சட்டசபை கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

இருப்பினும் மே 22-ந் தேதியே ஜெயலலிதா முதல்வராக பதவியேற்பாரா? அல்லது மே 23-ந் தேதி பதவி ஏற்பாரா? என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அண்ணா தி.மு.க.வின் பேச்சாளர் சி.ஆர். சரஸ்வதி, மே 22-ந் தேதி முதல்வர் பதவியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் ராஜினாமா செய்வார்; மே 23-ந் தேதி பிற்பகல் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்பார் எனக் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+