என்னாது சசிகலாவால் இந்த ஆட்சி உருவானதா?... பொய் பொய் சுத்த பொய்... அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: சசிகலாவால் இந்த ஆட்சி உருவானதாக கூறுவதெல்லாம் பொய் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது. இதனால் அதிமுக எம்எல்ஏக்களை ஓபிஎஸ்ஸோ அல்லது எதிர்க்கட்சியினரோ விலைக்கு வாங்கிவிடுவார்கள் என பயந்த சசிகலா 122 எம்எல்ஏக்களை கூவத்தூரில் அடைத்து வைத்தார். இதைத் தொடர்ந்து சசிகலா முதல்வராக பதவியேற்கவுள்ள நிலையில் அவர் சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார்.

முதல்வர்
இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக தேர்வு செய்து அவர் பதவியேற்றார். எம்எல்ஏக்களை சசிகலா கூவத்தூரில் தங்க வைத்ததால் மட்டுமே இந்த ஆட்சி நிலைத்தது என்று தினகரன் கூறி வந்தார்.

மகா பொய்யர்
இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடும் என்பது பொய்யர்களின் மகா செயல். இதை தமிழகத்தின் மகா பொய்யர் (தினகரன்) கடைப்பிடிக்கிறார்.

அதிமுகவுடன் இணைந்தாக வேண்டும்
அது நிச்சயம் எடுப்படாது. ஜெயலலிதா சொன்னது போல் இந்த ஆட்சி 100 ஆண்டுகள் நிலைத்திருக்கும். இது மக்களுக்கான அரசு. தினகரனுடன் சென்ற 18 எம்எல்ஏக்களும் அதிமுகவுடன் இணைந்துதான் ஆகவேண்டும்.

மனமாற்றம்
இது காலத்தின் கட்டாயம். மனமாற்றம் ஏற்படும் அனைவரையும் அரவணைத்துக் கொள்வதுதான் அதிமுகவின் வேலை என்றார் ஜெயக்குமார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications