என்.எல்.சி தொழிலாளி குடும்பத்துக்கு தேர்தலுக்குப் பின் நிவாரணம்... கருணாநிதி அறிக்கைக்கு ஜெ. பதில்
சென்னை: என்.எல்.சி தொழிலாளி பலியானதில் அரசைக் குற்றம்சாட்டி கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் ஆதாயம் தேடும் தந்திரத்தின் உச்சகட்டம் என்று முதல்வர் ஜெயலலிதா.குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது :-

அரசியல் தந்திரம்:
மத்திய அரசின் நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளி திரு. ராஜேந்திரன் அவர்கள் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரால் அந்த நிறுவன வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பது குறித்து திரு. கருணாநிதி அறிக்கை வெளியிட்டு இருப்பது அரசியல் ஆதாயம் தேடும் தந்திரத்தின் உச்சகட்டம்.

தேர்தல் நடத்தை விதி :
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் என்பது ஒரு மத்திய அரசு நிறுவனமாகும். அந்த நிறுவனத்திற்கான பாதுகாப்பினை மத்திய தொழில் பாதுகாப்புப் படை வழங்கிக் கொண்டு இருக்கிறது. இது மட்டுமல்லாமல், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால், தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளன. இலை போன்ற தோற்றம் எங்கிருந்தாலும் அதை இரட்டை இலை என்று நினைத்து தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. மனு கொடுக்கின்ற சூழ்நிலையில், சில அடிப்படைத் தேவைகள் குறித்து நடவடிக்கை எடுப்போம் என்று சொன்னாலே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறுகிறது என்று தி.மு.க. புகார் கொடுக்கின்ற சூழ்நிலையில், இறந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கினால், இதனை பெரிதாக்கி இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உடனடியாக புகார் கொடுக்க தி.மு.க. தயங்காது.

நிவாரண நிதிக்கு களங்கம் :
அதனால் தான், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண உதவி வழங்கப்படவில்லை என்பதை திரு. கருணாநிதிக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்ததிலிருந்து, தமிழக அரசின் சார்பில் யாருக்கும் எவ்வித நிவாரணமும் அளிக்கப்படவில்லை என்பதையும் திரு. கருணாநிதிக்கு கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண உதவி அளிக்கப்பட்டால், அதற்கு ஒரு களங்கம் கற்பித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுப்பார் திரு. கருணாநிதி.

தேர்தலுக்குப் பிறகு நிவாரணநிதி :
இது போன்ற புகாருக்கு இடம் அளிக்காமல், நிவாரண உதவியை தேர்தல் முடிந்த பிறகு அறிவித்துக் கொள்ளலாம் என்று கருதி, இரங்கல் செய்தியை மட்டும் நான் வெளியிட்டேன். பல்வேறு விபத்துகளில், நிகழ்வுகளில் உயிரிழப்போருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நான் நிதியுதவி வழங்கி வருவது மக்களுக்கு தெரியும். ஆனால், அரசியல் ஆதாயம் தேடும் வகையில், அமைச்சர்கள் சென்று பார்க்கவில்லை, நிவாரண உதவி அளிக்கவில்லை என்று ஓர் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் திரு. கருணாநிதி.

உள்நாட்டுப் போரா..?
ஊதி, ஊதி பெரிதாக்குவதில் வல்லவர் திரு. கருணாநிதி. அதனால் தான், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன வளாகத்திற்குள், மத்திய தொழிற் பாதுகாப்பு படையினருக்கும், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் நடைபெற்ற சம்பவத்தை சுட்டிக்காட்டி, உள்நாட்டு போர் நிகழ்ந்திருப்பது போல அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப் பட்டது :
இந்தப் பிரச்சனையில் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசை திரு. கருணாநிதி கண்டித்து இருக்க வேண்டும். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத் தொழிலாளி மத்திய தொழிற் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி அறிந்தவுடன், மாநில காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று நிர்வாகத்திடமும், தொழிலாளர் தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியுள்ளனர் என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்லாமல், பிற சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளையும் எனது தலைமையிலான அரசு தேர்தல் முடிந்த பிறகு நிச்சயம் அளிக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications