ஜெ. தீர்ப்பு எதிரொலி: காஞ்சி, கோவையில் பஸ்கள் எரிப்பு… பஸ்கள் ரத்து- மக்கள் பெரும் அவதி
காஞ்சிபுரம்: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் கலவரம் வெடித்துள்ளது. காஞ்சிபுரம், கோவையில் பேருந்துகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர். பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
18 ஆண்டுகளாக நடைபெற்ற சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து பெங்களூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து அதிமுகவினர் இன்று பல இடங்களில் மறியலில் ஈடுபட்டனர்.

பேருந்துகள் எரிப்பு
காஞ்சிபுரம் புதிய ரயில்வே சாலையில் சென்ற அரசு பஸ்சை 20-க்கும் மேற்பட்டோர் திடீரென வழி மறித்தனர். அவர்கள் பயணிகளை இறக்கி விட்டு பேருந்துக்கு தீ வைத்தனர். உடனே பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பயணிகள் ஓட்டம்
தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். எனினும் பேருந்து முழுவதும் எரிந்து நாசமானது. போலீசார் வருவதை தெரிந்ததும் பேருந்துக்கு தீ வைத்த கும்பல் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

கோவையில் தீவைப்பு
இதேபோல் கோவை காந்திபுரத்திலும் பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனையடுத்து பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. ஆங்காங்கே பேருந்துகள் எரிக்கப்படுவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

அம்பத்தூரில் எரிப்பு
இதேபோல் சென்னையை அடுத்த அம்பத்தூரிலும் பேருந்து தீவைத்து எரிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.

போக்குவரத்து நிறுத்தம்
தமிழகம் முழுவதும் பல முக்கிய நகரங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெளியூர் சென்றவர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications