For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மே 17ம் தேதி மீண்டும் முதல்வராகிறார் ஜெயலலிதா?

Google Oneindia Tamil News

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் வரும் 17ம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறை தண்டனை பெற்ற அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா உட்பட நான்கு பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதைத் தொடர்ந்து தனது தமிழக முதல்வர் மற்றும் ஸ்ரீரங்கம் சட்டசபை உறுப்பினர் பதவியை இழந்தார் ஜெயலலிதா. அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக பதவியேற்றார்.

மீண்டும் முதல்வர்...

மீண்டும் முதல்வர்...

இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜெயலலிதா மீண்டும் முதல்வராக இருக்கிறார். வரும் 17ம் தேதி அவர் மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்வர்...

எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்வர்...

எம்எல்ஏக்கள் கூடி அவரை முதல்வராக தேர்வு செய்வர். அதனைத் தொடர்ந்து அடுத்த 6 மாதத்தில் அவர் தேர்தலை எதிர்கொண்டு எம்எல்ஏவாக அவகாசம் உள்ளது.

முன்கூட்டியே தேர்தல்...

முன்கூட்டியே தேர்தல்...

ஆனால், தான் மட்டும் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் எம்எல்ஏ ஆவதற்கு பதிலாக, இந்தத் தீர்ப்பின் மூலம் கிடைத்துள்ள அரசியல் லாபத்தை வைத்து சட்டமன்றத் தேர்தலையே முன் கூட்டி நடத்தி விடுவார் ஜெயலலிதா என்றும் தகவல் தெரிவிக்கின்றன.

தமிழக அமைச்சர்கள்...

தமிழக அமைச்சர்கள்...

இந்நிலையில் தீர்ப்பை தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் அனைவரும் போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா இல்லம் முன்பு கூடி உள்ளனர்.

English summary
The Sources from ADMK says that Jayalalitha may be sworn in as CM again in 17th of this month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X