ஜெயலலிதாவின் சுதந்திரதின உரையில் மது விலக்கு பற்றி மருந்துக்கு கூட அறிவிப்பு இல்லை!
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய, சுதந்திர தின உரையின்போது, தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டுவருவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மதுவிலக்கு ஒரு அம்சமாகவே அவரது உரையில் இடம்பெறவில்லை.
மதுவிலக்கு கோரி போராடிய, காந்தியவாதி சசிபெருமாள் மரணமடைந்த பிறகு, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி போராட்டங்கள் வலுத்தன. கல்லூரி மாணவர்கள் சில இடங்களில் போராட்டம் நடத்தினர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. வாழப்பாடி அருகே, டாஸ்மாக் மீது குண்டு வீசியதில் அப்பாவி தொழிலாளர் உயிரிழந்தார். சென்னை குண்டு வீச்சில் டாஸ்மாக் ஊழியர் காயமடைந்தார்.
இதுபோன்ற களேபரங்கள், வரும் சட்டசபை பொதுத்தேர்தலில் அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்திவிடும் என்ற கருத்து பரவலாக எழுந்தது. எனவே, டேமேஜ் கன்ட்ரோலுக்காகவாவது, மதுவிலக்கு அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த அறிவிப்பை வெளியிட சுதந்திர தின உரையை ஜெயலலிதா பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. வாட்ஸ்சப் போன்ற சமூக வலைத்தளங்களிலும், சுதந்திரதினத்தன்று ஜெயலலிதா, தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டுவருவது குறித்தோ அல்லது, மதுக்கடை திறந்திருக்கும் நேரத்தை குறைப்படு குறித்தோ அறிவிப்பு வெளியிடுவார் என்று தகவல்கள் பரப்பப்பட்டன.
இந்நிலையில், கோட்டையில் தேசிய கொடியேற்றி ஜெயலலிதா இன்று உரையாற்றியபோது, மாநில மக்களில் பெரும்பாலானோர் மது விலக்கு அறிவிப்பை எதிர்நோக்கி ஊடகங்களை கவனித்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஜெயலலிதா ஆற்றிய 10 நிமிட உரையில் மதுவிலக்கு பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மது கொள்கை பற்றிய வேறு எந்த தகவலும் அவரது உரையில் இடம்பெறவில்லை.
எனவே, இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத்தி விமர்சனம் செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications