அதிமுக தொண்டர்கள் நிறைந்த கட்சி... திமுக குண்டர்கள் நிறைந்த கட்சி: ஜெயலலிதா
சேலம்: அதிமுக ஆட்சிக்காலத்தில் பெண்கள், குழந்தைகள் வாழ்வுக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். மகளிர் மேம்பாட்டில் தமிழகம் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவில் தொண்டர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்று கூறிய ஜெயலலிதா, திமுகவில் குண்டர்கள் அதிகம் இருப்பதாகவும், திமுக ஆட்சி காலத்தில் காவல்துறையினரை அவர்கள் பணி செய்ய விடாமல் தடுத்தாகவும் குற்றம் சாட்டினார்.

சட்டசபைத் தேர்தலில் சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, சேலத்தில் ஜெயலலிதா இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதிமுக அரசின் 5 ஆண்டுகால சாதனைகளைப் பட்டியலிட்ட ஜெயலலிதா, மகளிருக்கு செய்த நலத்திட்ட உதவிகளும், நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும் பட்டியலிட்டார். திமுக ஆட்சி காலம் தமிழகத்திற்கு இருண்ட காலம் என்றும், கருணாநிதி ஆட்சி காலத்தில் காட்டாட்சி நடைபெற்றது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
ஜெயலலிதா தேர்தல் பிரச்சார உரையின் முக்கிய அம்சங்கள் :
- அதிமுக ஆட்சி பொறுப்பேற்றதுமுதல் தமிழகம் வளர்ச்சிப்பாதையில் செல்கிறது.
- தமிழகத்தில் நல்லாட்சி தொடர அதிமுகவிற்கு வாக்களியுங்கள்
- விலையில்லா அரிசி, குறைந்த விலையில் பருப்புகள் வழங்கப்பட்டுள்ளன
- மகப்பேறு நிதி உதவி திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது
- பசுமை வீடுகள் திட்டம், ரூ. 1000 ரூபாய் முதியோர் உதவி திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது
- சொன்னதை செய்தேன்...சொல்லாத பல திட்டங்களையும் செய்தேன்
- பசுமை பண்ணைக் காய்கறிகள் தொடங்கப்பட்டுள்ளன
- அம்மா உணவகம் முதல் பல அம்மா திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
- நீங்கள் எதிர்பாராத திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன
- ஒரு தாய்க்குத்தான் தன் பிள்ளைகளுக்கு என்ன தேவை என்று தெரியும்
- உங்களுக்கு எப்போது என்ன செய்ய வேண்டும் என்று இந்த தாய்க்குத்தான் தெரியும்
- மக்களால் நான்... மக்களுக்குகாக நான், உங்களால் நான்... உங்களுக்காகவே நான்உங்களுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டது என் தவ வாழ்வு ஒவ்வொரு நொடியும் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்
- பெண்கள், குழந்தைகள் வாழ்வுக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது
- மகளிர் மேம்பாட்டில் தமிழகம் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது
- மகளிருக்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்களைப் பட்டியலிட்டார் ஜெயலலிதா
- பள்ளி மாணவர்களுக்கு பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது
- மாணவர்களுக்கு மடிக்கணினி உள்ளிட்ட பல சலுகைகளை வழங்கப்படுகிறது
- அதிமுக ஆட்சி காலத்தில் மேற்படிப்பு படிக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது
- கடந்த ஆண்டு திருமண உதவித் தொகை பெற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை 49% உயர்ந்துள்ளது
- மகளிருக்கு சுகாதாரமான சானிடரி நாப்கின்கள் வழங்கப்படுகிறது
- பெண்கள் பல நோய்களில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளனர்
- கருவுற்ற தாய்மார்களுக்கு மருத்துவ சஞ்சீவி திட்டம்,
- பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறை அமைக்கப்பட்டுள்ளது
- பெண்களுக்கான முழு உடல் பரிசோதனை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது
- பெண்களின் பணிசுமையை குறைக்க விலையில்லா மிக்சி, கிரைண்டர் வழங்கப்பட்டது
- கிராமப்புற பெண்களுக்காக ஆடு, மாடுகள் வழங்கப்பட்டன
- 2006ம் ஆண்டு முதல் தமிழகத்தில் நடைபெற்ற திமுக ஆட்சி இருண்ட ஆட்சி
- திமுக ஆட்சிக்காலத்தை காட்டாட்சி என்று கூட சொல்ல வேண்டும்
- பணிக்கு சென்ற மகன் பத்திரமாக திரும்புவானா என்று பதைப்பதைப்போடு திமுக ஆட்சியில் இருந்தனர்.
- திமுக ஆட்சி காலத்தில் எந்த வித நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை
- திமுக ஆட்சி காலத்தில் சமூக விரோதிகளைக் கண்டு பயப்படுபவர்களாக காவல்துறையினர் இருந்தனர்
- அதிமுக ஆட்சி காலத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது
- அதிமுக ஆட்சி காலத்தில் மக்கள் அமைதியாக வாழ்கின்றனர்
- அதிமுகவில் தொண்டர்கள் அதிகம் இருக்கிறார்கள்
- திமுகவில் குண்டர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள்
- திமுகவில் குண்டர்கள் இருக்கிறார்கள் என்பதை கருணாநிதியே சொல்லியிருக்கிறார்
- சேலத்தில் நில அபகரிப்புகள் அதிகம் நடைபெற்றுள்ளது, அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன
- அங்கம்மாள் காலனியைச் சேர்ந்த 23 குடும்பங்களின் நிலங்கள் வீரபாண்டி ஆறுமுகத்திடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது
- சட்டம் ஒழுங்கு சீரமைக்கப்பட்டதோடு, குற்றங்களும் குறைந்துள்ளன.
- தமிழகத்தில் மட்டுமே குற்றங்கள் குறைந்துள்ளன. திமுகவினர் வாக்கு கேட்டு வந்தால் அவர்களை விரட்டியடியுங்கள் செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா என்று கேட்டார் ஜெயலலிதா.
தொடர்ந்து பேசிய ஜெயலலிதா தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும், பூரண மதுவிலக்கு என்ற லட்சியத்தை எட்டுவோம் என்றும் ஜெயலலிதா கூறினார். கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைப் பட்டியலிட்டதோடு நல்லாட்சி தொடர அதிமுகவிற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
உண்மை எப்படி நம்பிக்கையை கொடுக்கிறதோ, உழைப்பு எப்படி வசதியைக் கொடுக்கிறதோ, திறமை எப்படி வெற்றியைக் கொடுக்கிறதோ, அதுபோல எனது ஆட்சி உங்களுக்கு வசந்தத்தைக் கொடுத்து இருக்கிறது.
இந்த வசந்தம் தொடர்ந்திட, ஏழைகள் தொடர்ந்து ஏற்றம் பெற, தமிழகம் அமைதிப் பூங்காவாய் தொடர்ந்திட, மின் வெட்டே இல்லை என்ற நிலை நிலைத்திட, பொருளாதாரம் அபரிமிதமான வளர்ச்சி அடைந்திட, தொழில்கள் தொடர்ந்து வளர்ச்சி அடைய, தொழிலாளர் நலன் பெருக, விவசாயம் விருத்தி அடைய, சேவைத் துறை மேலும் செழித்திட, தமிழகம் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் சென்றிட, தமிழகத்தின் உரிமைகள் தொடர்ந்து நிலைநாட்டப்பட, தற்போதுள்ள நலத்திட்டங்கள் நீடித்திட, அமைதி, வளம், வளர்ச்சி என்ற பாதையில் தமிழகம் தொடர்ந்து பீடுநடை போட, அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications