தமிழகத்திற்கு தற்காலிக முதல்வர் அவசியமில்லை... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
சென்னை: தமிழகத்திற்கு தற்காலிக முதல்வரை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஜெயலலிதா உடல் குறித்த விபரங்களை தெரிவிக்கக் கோரி டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த பொது நல மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுவரை 5க்கும் மேற்பட்ட அறிக்கைகளை மட்டுமே மருத்துவமனை வெளியிட்டுள்ளது. ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது.

இதனையடுத்து கடந்த அக்டோபர் 3ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்த விபரங்களை வெளியிட தமிழக தலைமை செயலாளர்,உள்துறை செயலாளர்,அப்போலோ மருத்துவமனை ஆகியவற்றுக்கு உத்தரவிட வேண்டும் என கோரி சமூக நல ஆர்வலர் டிராபிக் ராமசாமி,சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
ஜெயலலிதா குணமாகி வரும் வரை,புதிய முதலமைச்சரை நியமிக்க வேண்டும் எனவும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை அவசர வழக்காக கருதி,விரைவாக விசாரிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி கோரிக்கை விடுத்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 6ம் தேதியன்று வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்திருந்தனர்.
அதன்படி இன்று காலை இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு, அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். டிராபிக் ராமசாமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், முதல்வர் நலம்பெற்று வீடு திரும்பும் வரை செயல்முதல்வரை நியமிக்க வேண்டும் எனவும், அவரது புகைப்படத்தை வெளியிட உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
அதற்கு தலைமை நீதிபதி கவுல், இந்த பொதுநல மனு விளம்பரத்திற்காகவும், அரசியல் காரணங்களுக்காக தொடரப்பட்டிருப்பதாகவும்,சிகிச்சையில் இருக்கும் முதல்வரின் புகைப்படத்தை வெளியிடக் கோருவதை ஏற்க முடியாது எனவும் தெரிவித்தார். மேலும் தற்காலிக முதல்வரை நியமிக்கும் கோரிக்கையும் அவர் நிராகரித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞரும் ராஜ்யசபா எம்.பியுமான நவநீதிகிருஷ்ணன், முதல்வரின் உடல்நிலை குறித்து டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது என்று கூறினார். தமிழகத்திற்கு தற்காலிக முதல்வர் அவசியமில்லை
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications