கரும்பு டன்னுக்கு ரூ. 2650 ஆக உயர்வு: ஜெயலலிதா உத்தரவு!

இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கூறப்பட்டுள்ளதாவது:
கரும்பு மகசூல் திறனில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டில் 8.65 லட்சம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கரும்பு உற்பத்தித் திறனை மேலும் உயர்த்தும் வகையில், நுண்ணீர் பாசன முறையை அறிமுகப்படுத்தி, இந்த முறையை கையாளும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியமும் வழங்கப்பட்டு வருவதோடு, நுண்ணீர் பாசன மானியம் பெறுவதற்கான ஒரு ஏக்கர் என்ற உச்சவரம்பும் தளர்த்தப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல், நீடித்த நவீன கரும்பு சாகுபடி தொழில்நுட்பத் திட்டத்தினை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நீரில் கரையும் உரங்கள் உள்ளிட்ட பல்வேறு இடுபொருட்களை காலத்தே கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வழங்கும் வகையில், தோட்டக் கலைத் துறை ஆணையரகத்தில் சிறப்பு நோக்க அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு சுழல் நிதியாக 50 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
கரும்பு உற்பத்தியைப் பெருக்க இது போன்ற சலுகைகளை வழங்கி வரும் எனது தலைமையிலான அரசு, ஒவ்வொரு ஆண்டும் கரும்புக்கான, நியாயமான மற்றும் ஆதாய விலையை மத்திய அரசு உயர்த்தும் போதெல்லாம், கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, மாநில பரிந்துரை விலையை தொடர்ந்து வழங்கிக் கொண்டு இருக்கிறது.
அந்த வகையில், 2011-2012 ஆம் ஆண்டிற்கான கரும்பு பருவத்திற்கு நியாயமான மற்றும் ஆதாய விலையாக டன் ஒன்றிற்கு 1,450 ரூபாய் கொடுக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு நிர்ணயம் செய்த போது, போக்குவரத்துச் செலவு 100 ரூபாய் உட்பட கரும்புக்கான மாநில அரசின் பரிந்துரை விலையை 650 ரூபாய் உயர்த்தி 2,100 ரூபாயாகவும்; 2012-2013 ஆம் ஆண்டிற்கான கரும்பு விலையை டன் ஒன்றிற்கு 1,700 ரூபாய் என மத்திய அரசு நிர்ணயித்த போது, போக்குவரத்துச் செலவு 100 ரூபாய் உட்பட கரும்புக்கான மாநில அரசின் பரிந்துரை விலையை 650 ரூபாய் உயர்த்தி 2,350 ரூபாயாகவும் வழங்க நான் ஆணையிட்டேன். தற்போது, 2013-2014 ஆம் ஆண்டிற்கான கரும்பு பருவத்திற்கு நியாயமான மற்றும் ஆதாய விலையாக டன் ஒன்றிக்கு 2,100 ரூபாய் நிர்ணயம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கரும்பு விவசாயிகள் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு அறிவித்த விலையைக் காட்டிலும், 2013-2014 ஆம் ஆண்டிற்கான மாநில அரசின் பரிந்துரை விலையாக டன் ஒன்றிற்கு போக்குவரத்துச் செலவு 100 ரூபாய் உட்பட 550 ரூபாய் உயர்த்தி வழங்க நான் ஆணையிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன்மூலம், கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றிக்கு 2,650 ரூபாய் கிடைக்கும்.எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கை, கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மன மகிழ்ச்சியினை அளிக்கும்" என்று ஜெயலலிதா வெளியிட்டுள்ள கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications