For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ.உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்-இனி செயற்கை சுவாசம் இல்லை: மாலினி பார்த்தசாரதி ட்வீட் #jayalalithaa

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இனி அவருக்கு செயற்கை சுவாசம் தேவை இல்லை என்றும் இந்து நாளேட்டின் முன்னாள் ஆசிரியர் மாலினி பார்த்தசாரதி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மூச்சுத்திணறல் காரணமாக கடந்த மாதம் 22-ந் தேதி இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் முதல்வர் ஜெயலலிதா. அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் முடிவில் ஜெயலலிதாவுக்கு நுரையீரலில் நோய்த்தொற்று அதிகமானதால் மூச்சுவிட சிரமப்படுவதாக கூறப்பட்டது.

Jayalalitha making good progress after tracheostomy, says Malini Parthasarathy

முதலில் காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு என்று கூறியது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம். ஆனால் ஜெயலலிதாவுக்கு நேற்று நுரையீரல் அடைப்பு நீக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இதனிடையே இந்து ஆங்கில நாளேட்டின் முன்னாள் ஆசிரியரான மாலினி பார்த்தசாரதி நேற்று இரவு தமது ட்விட்டர் பக்கத்தில், சுவாச கோளாறு சிகிச்சைக்குப் பின்னர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது; தற்போது அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படவில்லை என பதிவிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கடந்த வாரம் வதந்திகள் பரவிய போது, மாலினி பார்த்தசாரதிதான், மகிழ்ச்சி... ஜெயலலிதா அபாயகட்டத்தைத் தாண்டிவிட்டார் என பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
The Hindu Former Editor Malini Parthasarathy said that Jayalalitha making good progress after tracheostomy & not on ventilator Great sign! in her twitter post.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X