ஒரு நல்ல தலைவரைக் கூட உருவாக்கலையே ஜெயலலிதா!
Recommended Video

சென்னை: ஒவ்வொரு பெரும் தலைவர்களும் தங்களது வாரிசுகளை விட்டுச் சென்ற வரலாற்றைத்தான் இத்தனை காலம் தமிழகம் பார்த்துள்ளது. ஆனால் ஒரு வாரிசைக் கூட தனது கட்சிக்கோ அல்லது தமிழகத்துக்கோ தராத ஒரே தலைவர் ஜெயலலிதாதான்.
பெரியாரின் வாரிசுகள் பலர். அண்ணாவுக்கு அருமையான வாரிசாக கருணாநிதி உருவெடுத்தார். அவரது வாரிசாக மு.க.ஸ்டாலின் களத்தில் உள்ளார்.
எம்.ஜி.ஆரின். பிரமாண்ட வாரிசாக ஜெயலலிதா உருவெடுத்தார். அவர் தவிர பல குட்டித்தலைவர்களும் கூட உருவாகினார்கள். ஜெயலலிதா அளவுக்கு இல்லாவிட்டாலும் கூட திருநாவுக்கரசர் போன்றோர் இன்றும் கூட லைம்லைட்டில்தான் உள்ளனர்.

ஜெ. வாரிசு எங்கே
ஆனால் ஜெயலலிதாவின் வாரிசு என்று ஆளுமை மிக்க யாரையுமே பார்க்க முடியவில்லை. ஜெயலலிதா மறைந்து ஒரு வருடமாகி விட்டது. இன்று வரை அவரது வாரிசாக யாரையுமே நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

உருவாக்கியிருந்தால்தானே
உண்மையில் ஜெயலலிதா தனக்கான வாரிசு என்று யாரையுமே உருவாக்கவில்லை. யாரையுமே அவர் தலைவராக கருதவில்லை. யாரையுமே வளர்க்க விரும்பவில்லை. வளரவும் விட்டதில்லை.

வெட்டி விலக்கி விட்டவர்
யாராவது தலை தூக்குவதாக தெரிந்தால் அவர்களை விரட்டி விட்டவர், வெட்டி விட்டவர் ஜெயலலிதா. தனக்கு நிகராக யாரையும் அவர் நினைத்ததில்லை. தனக்கு அடுத்து கூட யாரும் இருக்கக் கூடாது என்றும் செயல்பட்டவர் ஜெயலலிதா என்பதே நிதர்சனம்.

அடப் பாவமே நிலையில் அதிமுக
தனக்குப் பின்னர் இந்தக் கட்சியே இருக்கக் கூடாது என்று நினைத்தாரோ என்னவோ இன்று சரியான தலைவர் இல்லாமல், தலைவர் என்று யாருமே இல்லாத நிலையில் அதிமுக உள்ளது. இவர்தான் அதிமுகவின் தலைவர் என்று யாரையுமே கூற முடியவில்லை. நிச்சயம் இந்தக் கட்சியின் எதிர்காலம் என்பது மிகப் பெரிய கேள்விக்குறிதான்.

ஆச்சரியமான தலைவர்
கடைசி வரை தனக்கு அடுத்த நிலை தலைவரை உருவாக்காமலேயே மறைந்து போயுள்ளார் ஜெயலலிதா. வழக்கமான தலைவராக இவரைப் பார்க்க முடியவில்லை. ஒரு Bizarre தலைவராக மட்டுமே இவரை பார்க்க முடிகிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications