ரூ.1000 கோடி திரையரங்கு சர்ச்சை.. ஒரு வாரமாகியும் ஒரு வார்த்தையும் சொல்லாத ஜெயலலிதா!
சென்னை: வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள பிரபல லக்ஸ் சினிமா தியேட்டரை முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா உறவினர்கள் பெயரில் ரூ.1000 கோடிக்கு வாங்கியதாக தி ந்து ஆங்கில நாளிதழ் சில ஆதாரங்களை வெளியிட்டு செய்தி வெளியிட்ட நிலையில், எதிர்க்கட்சி தலைவர்கள் அத்தனை பேரும் அதுகுறித்து விளக்கம் கேட்டும், இதுவரை முதல்வர் ஜெயலலிதா அதுபற்றி எந்த பதிலும் கூறவில்லை.
தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான நிறுவனமான எஸ்பிஐ சினிமா (சத்யம்) சென்னையில் பல திரையரங்குகளை நடத்தி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள 11 திரைகள் (தியேட்டர்கள்) உடன் கூடிய, பிரமாண்ட லக்ஸ் திரையரங்கு, திடீரென ஜாஸ் சினிமாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் என்று இதற்கு முன் அழைக்கப்பட்ட ஜாஸ் நிறுவனம் கடந்த 2005ல் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் பெயர் மாற்றம் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி ஆகியோர் முன்னிலையில் கடந்த 2014 ஜூலை 14ல் நடந்த சிறப்பு பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி நடந்துள்ளது.

பெயர் மாற்றம்
இந்த பெயர் மாற்றத்துக்கான தீர்மானத்தில் சசிகலா ஒப்புதல் கையெழுத்து போட்டிருப்பதாகவும் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிறுவனம் திரைப்படங்களை தயாரித்தல், வினியோகம் செய்தல் மற்றும் சினிமாத் துறை சம்மந்தப்பட்ட தொழில்களையும் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

சசிகலா உறவினர்கள்
ஜாஸ் சினிமா நிறுவனத்தின் ஆவணங்களை பார்க்கும்போது இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக கார்த்திகேயன் கலியபெருமாள், சிவகுமார் கூத்தையப்பர் சத்தியமூர்த்தி ஆகியோர் உள்ளனர். இவர்கள் மிடாஸ் கோல்டன் டிஸ்டிலரிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்களாகவும் உள்ளனர். (சசிகலா, இளவரசியின் உறவினர்கள்)

ஆயிரம் கோடியா?
ஏற்கனவே, எஸ்பிஐ சினிமா நிறுவனத்தை பிவிஆர் சினிமாஸ் என்ற நிறுவனம் வாங்குவதற்காக முயற்சி செய்துள்ளது. இரு நிறுவனங்களுக்கும் இடையே ரூ. 600 கோடி முதல் ரூ.1000 கோடி வரை பேரம் நடந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால், ஜாஸ் நிறுவனம் பிவிஆர் சினிமாஸ் நிறுவனம் பேசிய தொகையை விட அதிக விலைக்கு வாங்கியிருப்பார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், எவ்வளவு தொகைக்கு வாங்கப்பட்டது என்ற விவரங்களை அவர்கள் தெரிவிக்க இரு தரப்பிலும் மறுத்து வருகின்றனர்.

கருணாநிதி கோரிக்கை
இந்த விவகாரம் பற்றி எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். முதல்வர் விளக்கம் தர வேண்டும் என்று கருணாநிதி கோரியுள்ளார். சிபிசிஐடி விசாரணை வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும், சிபிஐ விசாரணை தேவை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வைகோ போன்றோர் கேட்டுவருகின்றனர். பாமக நிறுவனர் ராமதாஸ், எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் போன்றோரும் இந்த விவகாரம் பற்றி பிரச்சினை கிளப்பி வருகின்றனர்.

வாய் திறக்கவில்லை
ஆனால் சர்ச்சை வெளியாகி 1 வாரம் ஆகியும், இன்னும் அரசு தரப்பில் முதல்வர் ஜெயலலிதா எந்த கருத்தும் கூறவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் லெனின், இதுகுறித்து கூறும்போது, 2015 வாக்காளர் பட்டியலை எடுத்து பார்த்தால், சொத்தை வாங்கியவர்களும், முதல்வர் ஜெயலலிதாவுடன் ஒரே வீட்டில்தான் வசிப்பது அப்பட்டமாக தெரிகிறது. ஒரே வீட்டில் உள்ளவர் வாங்கிய சொத்துக்கு முதல்வர் பதில் சொல்லியாக வேண்டும்.

ஆதாரமில்லையே
இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் கூறுகையில், கடலில் விழுந்து தத்தளிப்பவர்களுக்கு கட்டையாக இருந்தாலும், கரடியாக இருந்தாலும் கட்டிப்பிடித்து தப்பிக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். அதுபோலத்தான் எதிர்க்கட்சிகள், ஆதாரமற்ற கற்பனையான குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார்கள்.

2ஜியும் உண்மையா
முதல்வர் இதில் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இப்படி, நடந்திருக்க கூடாதா, அப்படி நடந்திருக்க கூடாதா என்று கற்பனையாகத்தான் குற்றச்சாட்டுகளை சொல்கிறார்கள். பத்திரிகைகளில் வரும் குற்றச்சாட்டுகளையெல்லாம் உண்மை என்றால், போபர்ஸ், 2ஜி ஊழல்களை உண்மை என்று கருணாநிதி ஏற்றுக்கொள்வாரா என்று தமிழரசன் தெரிவித்தார்.
திமுகவை சேர்ந்த கண்ணப்பன் கூறுகையில், ஜெயலலிதாவுடன், சொத்துக்குவிப்பு வழக்கை இணைந்தே சந்தித்தவர் சசிகலா. அவர் சார்ந்த நிறுவனங்கள் பினாமி நிறுவனங்கள் என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி, குன்ஹா தீர்ப்பில் அறிவிக்கப்பட்டது. கூட வழக்கை சந்தித்தவர் குறித்து முதல்வர் பதில் சொல்ல வேண்டும் என்றார்.

2 வருடம் பழைய தகவல்
அரசியல் விமர்சகரும் பாஜக ஆதரவாளருமான சுமந்த் சி.ராமன் கூறுகையில், 2014ம் ஆண்டு டிசம்பரிலேயே இணையதளம் ஒன்றில் தியேட்டர் கொள்முதல் பற்றிய தகவல் வந்துவிட்டது. இது அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் தெரியும். அந்த தகவலில் உண்மையிருந்தால், ஆதாரம் கிடைத்திருந்தால், அப்போதே, சசிகலா மீது எதிர்க்கட்சிகள் வழக்கு போட்டிருக்கலாம்.

தேர்தலுக்காகவா
இப்போது தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த தகவலை ஹிந்து பத்திரிகை வெளியிட்டுள்ளதால், கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இணையதளத்தில் வெளியான தகவலைவிட கூடுதலாக ஹிந்து எந்த தகவலையும் வெளியிடாய நிலையில் எதிர்க்கட்சிகள் இப்போது ஏன் இதை பிரச்சினையாக்குகிறார்கள். எனவே முதல்வர் பதிலளிக்க தேவையில்லை என்றார்.

தார்மீக அடிப்படை
சட்டப்படி முதல்வர் கூட வசிப்பவர் சொத்து வாங்குவதில் பிரச்சினை கிடையாது. ஆனால், ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்து வாங்கியதாக குற்றச்சாட்டு சுமத்தப்படுவதால், அது உண்மையா, ஒருவேளை வாங்கியிருந்தால் அந்த நிதி ஆதாரம் எங்கிருந்து வந்தது, மிரட்டிதான் வாங்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையுள்ளதா என்பது குறித்தெல்லாம், தார்மீக ரீதியாக ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டும் என்பது நடுநிலையாளர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications