மருத்துவமனைக்கு செல்ல ஜெயலலிதா மறுத்து விட்டார்.. வீட்டிலேயே சிகிச்சையளித்தோம்.. சொல்கிறார் சசிகலா
ஜெயலலிதா மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டார் என சசிகலா தனது பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ஜெயலலிதா மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டார் என சசிகலா தனது பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி கமிஷனில் 55 பக்கங்களை கொண்ட பிரமாண பத்திரத்தை சசிகலா தரப்பு தாக்கல் செய்துள்ளது. அதில் செப்டம்பர் 22ஆம் தேதி இரவு ஜெயலலிதாவுக்கு வீட்டில் என்ன நடந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு இரவு போயஸ் கார்டன் இல்லத்தில் முதல் தளத்தில் உள்ள பாத்ரூமில் தவறி விழுந்தார் என்றும், தான்தான் அவரை கைத்தாங்கலாக படுக்கைக்கு அழைத்து வந்ததாகவும் கூறியுள்ளார்.

15 நிமிடங்களில் 2 ஆம்புலன்ஸ்
அப்போது ஜெயலலிதா மயங்கி விழுந்ததாகவும் சசிகலா கூறியுள்ளார். ஜெயலலிதாவை சோதித்த மருத்துவர் சிவகுமார், அப்பல்லோ மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தார். அப்பல்லோ மருத்துவமனை 15 நிமிடங்களுக்குள் இரண்டு ஆம்புலன்களை அனுப்பி வைத்ததாகவும் சசிகலா தனது பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

எங்கே அழைத்து செல்கிறீர்கள்
ஆம்புலன்ஸில் சென்றபோது மயக்கம் தெளிந்த ஜெயலலிதா தன்னை எங்கே அழைத்து செல்கிறீர்கள் என்று கேட்டார் எனவும், மருத்துவமனைக்கு செல்வதாக தான் கூறியதாகவும் சசிகலா பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

காய்ச்சலால் பாதிப்பு
செப்டம்பர் மாதம் முழுவதும் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் தான் இருந்தார் என்றும் சக்கரை அளவு ஏற்ற இறக்கத்துடன் இருந்ததாகவும் சசிகலா தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு செப்டம்பர் 19ஆம் தேதி காய்ச்சல் வந்ததாகவும் காய்ச்சலுடனேயே அவர் 21ஆம் தேதி நடைபெற்ற பொது விழாவில் பங்கேற்றார் என்றும் சசிகலா வாக்குமூலம் அளித்துள்ளார்.

மருத்துவமனைக்கு செல்ல மறுப்பு
உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது மருத்துவமனைக்கு செல்ல ஜெயலலிதா மறுத்ததாகவும் சசிகலா தெரிவித்துள்ளார். வீட்டில் தவறி விழுந்ததற்கு 2 நாட்களுக்கு முன் ஜெயலலிதாவுக்கு 2 முறை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதாகவும் தனது பிரமாண பத்திரத்தில் சசிகலா தெரிவித்துள்ளார்.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications