For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அட்மிட் செய்யும்போது ஜெ. எந்த நிலையில் இருந்தார்? டிவி சேனல் வெளியிட்ட பரபர தகவல்கள்

By Suganthi
Google Oneindia Tamil News

Recommended Video

    மயக்க நிலையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா-வீடியோ

    சென்னை: கடந்த ஆண்டு, செப்டம்பர் 22ஆம் தேதி, ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் அவர் அரை மயக்க நிலையில் இருந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஜெயலலிதாவின் உடல்நிலை கடந்த ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதி அபாயகரமான நிலையில் தான் இருந்துள்ளது. காரணம் வெளியாகியுள்ள மருத்துவ அறிக்கையில் அன்று இரவு அவருடைய இதயத்துடிப்பு 88ஆக இருந்துள்ளது.

     Jayalalitha's condition on Sep. 22nd 2016 night

    72ஆக இருக்க வேண்டும். நிமோனியா காய்ச்சல், ரத்த அழுத்தம், தைராய்டு பிரச்சனையும் இருந்துள்ளது. ரத்த அழுத்தம் 120/80க்கு பதிலாக 140/70 ஆக இருந்துள்ளது.

    அதே போல், 120 மி.கிராமாக இருக்க வேண்டிய சர்க்கரை அளவு அதிகமாக உயர்ந்து 508 மி.கிராம் வரை இருந்துள்ளது. ஆக்ஸிஜன் அளவு 100 இருக்க வேண்டும். ஆனால் அவருக்கு வெறும் 48 சதவீதமே இருந்ததால் மூச்சு விடுவதில் சிரமம் இருந்துள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அரை மயக்க நிலையில் எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல் ம்ம்..ஆ என்று சொல்லக் கூடிய வகையில் தான் இருந்திருக்கிறார்.

    குறிப்பாக உடலில் காயங்கள், புண்கள் எங்கும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் புதிய தலைமுறை டிவி சேனலில் வெளியாகியுள்ளது.

    English summary
    Jayalalitha's condition on 22nd 2016 night. She was in semi conscious.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X