"அம்மா ரிட்டர்ன்ஸ்"... மெரினாவில் குவிந்த அதிமுகவினர் – தலைமைச் செயலகம் வரை போக்குவரத்து தடை!
சென்னை: தமிழக முதல்வராக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று பதவியேற்றதை முன்னிட்டு கடற்கரை காந்தி சிலையில் இருந்து தலைமை செயலகம் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.
தமிழக முதல்வராக ஜெயலலிதா இன்று காலை 11 மணிக்கு பதவியேற்றார். இதற்கான விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்றது. அவ்விழாவிற்காக போயஸ் தோட்டத்தில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டார் ஜெயலலிதா

இவ்விழாவில் ஜெயலலிதாவுடன் கூடவே 28 அமைச்சர்களும் பதவியேற்றனர். ஜெயலலிதா மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர் ரோசையா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதற்காக சென்னை மெரினா கடற்கரை சாலையில் அதிமுக தொண்டர்கள் கரைபுரண்ட வெள்ளமென திரண்டிருந்தனர். கடற்கரையில் அமைந்துள்ள உழைப்பாளர் சிலை அருகே பெரிய திரைகளில் பதவியேற்பு விழா ஒளிபரப்பானது.
கடற்கரை சாலையில் 8 கி.மீ தொலைவிற்கு காலை முதலே அணிவகுத்து நின்றிருந்தனர் அதிமுக தொண்டர்கள். எழிலகத்தின் மாடியில் இருந்து ராட்சத பலன்களில் காமிராக்கள் பொருத்தி போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்ட ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் விழா நடைபெறும் இடத்தைச் சென்றடைந்து, பதவியேற்பு விழா முடிந்து திரும்பும் வரையில் காந்தி சிலை முதல் தலைமைச் செயலகம் வரையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications