ஜெ. ஆவி என் கூட பேசுச்சே... திகில் கிளப்பும் திருவாரூர் சாமியார்!
ஜெயலலிதாவின் ஆவி பேசியதாக திருவாரூரை சேர்ந்த சாமியார் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: ஜெயலலிதாவின் ஆவி தன்னிடம் பேசியதாக திருவாரூரைச் சேர்ந்த ஸ்ரீமகரிஷி என்ற சாமியார் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் ஆவி தன் மீது இறங்கியிருப்பதாக கூறிய சாமியார், ஜெயலலிதாவின் ஆன்மா போல் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது போல் அவரது மரணம் வரை எல்லாமே மர்மமாக உள்ளது. ஜெயலலிதா மறைந்து 3 மாதங்கள் கடக்க உள்ள நிலையில் அவரது மரணத்தில் உள்ள மர்மம் இன்னும் விலகாமல் உள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினரும் குடைச்சல் கொடுக்க சசிகலா தரப்பு ஜெ.வுக்கு சிகிச்சையளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியலை வரவழைத்து அப்பல்லோ மருத்துவர்களுடன் இணைந்து விளக்கமளிக்க வைத்தது. ஜெ.மரணத்தில் ஏற்கனவே ஏராளமான மர்மங்களும் குழப்பங்களும் நீடித்து வரும் நிலையில் மருத்துவர்கள் அளித்த விளக்கம் கூடுதல் குழப்பத்தையும் சந்தேகத்தையும் கிளப்பி விட்டுள்ளது.

ஜெயலலிதாவின் ஆவி பேசியது
இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு திருவாரூரை சேர்ந்த ஸ்ரீமகரிஷி என்ற சாமியார் வந்தார். அவர் தன்னிடம் ஜெயலலிதாவின் ஆவி பேசியதாகவும் அதுகுறித்து ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க வேண்டும் என்று கூறி அனுமதிக்காக காத்திருந்தார்.

ஜெ.ஆவிப்போல் பேசினார்
அவரிடம் நிருபர்கள் விசாரித்தபோது, கண்களை மூடியபடி ஜெயலலிதா ஆவி தன் மீது இறங்கி இருப்பதாக சாமியார் ஸ்ரீ மகரிஷி கூறினார். அந்த ஆவி பேசுவது போலவும் அவர் பேசினார்.

'இறந்துதான் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தேன்'
அவர் பேசியதாவது, " நான் (ஜெயலலிதா) இறந்துதான் 75 நாட்களாக மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தேன். ஓ.பி.எஸ்சும், தீபாவும் இணைந்து எனது இயக்கத்தை வழி நடத்த வேண்டும்.

ஓபிஎஸ்க்கு உறுதுணையாக இருப்பேன்
இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற வேண்டும். அவர் என் அன்புக்கு பாத்தியமானவர். அவருக்கு உறுதுணையாக இருப்பேன்.

சதிகாரர்கள் வலையில் சிக்கக்கூடாது
சதிகாரர்கள் இயக்கத்தை உடைக்க பார்க்கிறார்கள். அவர்கள் வலையில் விழுந்து விடக்கூடாது. இவ்வாறு அந்த சாமியார் ஜெயலலிதாவின் ஆன்மா பேசுவதுப் போல் பேசினார். ஆவி, பேய், பூதம் எல்லாம் பொய் என்று கூறப்பட்டாலும் ஜெயலலிதாவின் மரணம் குறித்து வெளியாகும் ஒவ்வொரு தகவலும் பரபரப்பை ஏற்படுத்திதான் வருகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications