பத்ம விபூஷண் விருது மூலம் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் சாந்தா - ஜெயலலிதா
சென்னை: மத்திய அரசின் பத்மவிபூஷண் விருதுக்கு தேர்வான அடையாறு புற்று நோய் சிகிச்சை மையத் தலைவர் டாக்டர் வி.சாந்தாவுக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று வாழ்த்துத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் அனுப்பிய வாழ்த்துச் செய்தி:
இந்த ஆண்டிற்கான பத்மவிபூஷண் விருதுக்குரியவராக கௌரவிக்கப்பட்டுள்ளதற்கு, எனது சார்பாகவும், தமிழக மக்களின் சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களுக்கு பத்மவிபூஷண் விருது வழங்க வேண்டும் என தமிழக அரசு பரிந்துரை செய்ததை, மத்திய அரசு ஏற்றுக்கொண்டது தமக்கு பெரிதும் மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக புற்றுநோயைத் தடுப்பதற்கும், சுயநலமற்ற வகையில் அர்ப்பணிப்பு உணர்வோடு மருத்துவம் பார்த்துவரும் தங்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த விருதுக்கு தாங்கள் முற்றிலும் தகுதியானவர்.
தங்களது சேவையின் காரணமாக, பல லட்சம் நோயாளிகள் பயன்பெற்றுள்ளனர். அடையாறு புற்றுநோய் மருத்துவ மையத்துக்கு இந்திய அளவில் அங்கீகாரம் ஏற்படுத்தித் தந்ததற்காக தமிழகம் பெருமைப்படுகிறது. அதற்காக மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications