அடுத்து 'அம்மா மக்கள் சேவை மையங்கள்'!
சென்னை: பிறப்பு, இறப்பு, குடிநீர்க் குழாய் இணைப்பு உள்பட தமிழக அரசின் பல்வேறு சேவைகளைப் பெற 'அம்மா மக்கள் சேவை மையங்கள்' ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இந்தச் சேவை மையங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் செயல்படும்.
சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை படித்தளித்த அறிக்கை:
அலுவலர்கள், அலுவல் நிமித்தமாக வெளியிடங்களுக்குச் சென்றுவிடும் நேர்வில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் அந்த அலுவலர்களைச் சந்திக்க இயலாமல் போய் விடுகிறது. இதைத் தவிர்க்க வாரத்தில் ஒரு நாள் மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும், நகராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும் 'அம்மா' மக்கள் சேவை மையம் நடத்தப்படும்.

வாரத்தில் ஒவ்வொரு புதன்கிழமையன்றும் செயல்படுத்தப்படும் இந்த மையத்தில் மாநகராட்சி மண்டல அலுவலகத்தின் உதவி ஆணையர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஆகியோர் பொது மக்களிடமிருந்து மனுக்களைப் பெறுவர்.
அந்த மனுக்களின் மீது ஆய்வு செய்து குறிப்பிட்ட காலவரையறைக்கு ஏற்ப உத்தரவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து விண்ணப்பங்களையும் கணினியில் பதிவு செய்து, ஒவ்வொரு கோரிக்கை மனுவுக்கும் விண்ணப்பதாரர்களுக்கு முறையான பதில் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
இந்தப் பணி முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அந்தந்தத் துறைத் தலைவர்கள் இணையதளம் மூலம் கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்படும். இதன்மூலம், அரசின் சேவைகள் மக்களுக்கு கால விரயமின்றி குறைந்த செலவில் சென்றடைவது உறுதி செய்யப்படும்.
என்னென்ன சேவைகள்?
பிறப்பு, இறப்புச் சான்றிதழ், வர்த்தக உரிமம், பாதாள சாக்கடைக் குழாய் இணைப்பு, குடிநீர்க் குழாய் இணைப்பு, தொழில் வரி விதிப்பு, சொத்து வரி கேட்பு, கட்டட அனுமதி, பெயர் மாற்றம், காலிமனை வரி விதிப்பு, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்குச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு அரசின் சேவைகளுக்கு இந்த மையத்தில் விண்ணப்பங்களை அளிக்கலாம்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications