For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. இட்லி சாப்பிடலையா.. உண்மையை சொல்லுங்க அந்த இட்லியை சாப்பிட்டது யாரு? நெட்டிசன்கள் சீண்டல்

ஜெயலலிதா இட்லி சாப்பிட்ட கதையை திண்டுக்கல் சொன்னதுதான் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா இட்லியும் சாப்பிடவில்லை, சட்னியும் சாப்பிடவில்லை என்று திண்டுக்கல் சீனிவாசன் சொன்னாலும் சொன்னார் நெட்டிசன்களின் கிண்டல்கள் படு பயங்கரமாக உள்ளது.

அம்மா இட்லி சாப்பிட்டாங்கனு சொன்னதை கூட மன்னிச்சிடுவோம்,ஆனா ரெண்டு நர்ஸ்சுக்கு கிங்காங்குனு பேர் வச்சாங்கனு சொன்னீங்களேடா என்று கேட்டுள்ளார் ஒருவர்.

செப்டம்பர் 22ஆம் தேதியன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா நவம்பர் 19ஆம் தேதி தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து மற்றொரு அறைக்கு மாற்றப்பட்டார். உப்புமா, பொங்கல் உணவு வகைகளை வழக்கம் போல சாப்பிடத் தொடங்கி இருந்தார் என்று மருத்துவர்கள் கூறினர்.

உலகமே அவரை இரும்பு பெண்மணி என புகழாரம் சூட்டினர், அவரது பாசமான முகத்தை பார்த்ததாக தெரிவிக்கின்றனர். நர்ஸ்கள் சி.வி.ஷீலா, எம்.வி.ரேணுகா, சாமுண்டீஸ்வரி ஆகிய மூவரையும் 'கிங் காங்' என்றே செல்லமாக அழைத்ததாக கூறினர்.

கனவு தான் கண்டோம்

மருத்துவமனையில் சசிகலா கூட ஜெ-வை பார்க்கவே இல்லை என்று நேற்று கூறினார் தினகரன். அதற்கு ஒருவர்,
ஜெ அட்மிட் ஆகவில்லை, அட்மிட் ஆன மாதிரி கனவு தான் கண்டோம் என்று பதிவிட்டுள்ளார்.

திண்டுக்கல் சீனிவாசன்

ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என பொய் சொன்னோம்.! - திண்டுக்கல் சீனிவாசன் சரி, இப்ப உண்மைய சொல்லுங்க. அந்த இட்லிய தின்னது யாரு.? என்று கேட்டுள்ளார் ஒரு வலைஞர்.

பொய்யிலே பிறந்து

ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என பொய் சொன்னோம் - திண்டுக்கல் சீனிவாசன் "பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த அமைச்சர் பெருமக்களே..!" என்று பதிவிட்டுள்ளார் ஒருவர்.

இதுவும் பொய்யா?

அன்று. சசிகலா பசி யோட அம்மா அருகிலே இருந்துக்கொண்டு உபசரிக்கிறார் சொன்னார்கள்.பொய் சொல்வதில் சசிகலா குடும்பத்தினருக்கு நிகர் யாரும் இல்லை என்று கேட்டுள்ளார்.

English summary
Netizens post funny commentsDindugal Sreenivasan and TTV Dinakaran statement for memes in social media. Nurses treating on Jayalalithaa called as King Kong. In all there were a team of 16 nurses posted to look after her.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X