ஒரே மேடையில் 14 திருமணங்கள்... 10ம் தேதி சென்னையில் ஜெ. நடத்தி வைக்கிறார்
சென்னை: சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அதிமுக கழக நிர்வாகிகள் 14 பேரின் இல்லத் திருமணத்தை, அடுத்த மாதம் 10ம் தேதி அதிமுக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா தலைமையேற்று நடத்தி வைக்கிறார்.
இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வருகின்ற 10-ந்தேதி (புதன்கிழமை) காலை 11 மணி அளவில், சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், பின்வரும் கழக நிர்வாகிகள் 14 பேர்களின் இல்லத் திருமணங்களை தலைமையேற்று நடத்தி வைக்க உள்ளார்.

1. தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான அமைச்சருமான ஆர். வைத்திலிங்கத்தின் மகள் திருமணம்.
2. திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளரும், அமைச்சருமான ஆர். காமராஜின் மகன் திருமணம்.
3. தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளரும், அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதனின் மகள் திருமணம்.
4. திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், அமைச்சருமான முக்கூர் என். சுப்பிரமணியனின் மகன் திருமணம்,
5. கழக விவசாயப் பிரிவுச் செயலாளரும், திருமயம் எம்.எல்.ஏ. வைரமுத்துவின் மகள் திருமணம்,
6. கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ. முனுசாமியின் மகன் திருமணம்,
7. நீலகிரி மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளரும், உதகமண்டலம் எம்.எல்.ஏ. புத்திசந்திரனின் மகள் திருமணம்,
8.திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பெருமாள் நகர் ராஜனின் மகள் திருமணம்,
9. காஞ்சீபுரம் மத்திய மாவட்டக் கழக அவைத் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. ராமச்சந்திரனின் மகன் திருமணம்,
10. வேலூர் மேற்கு மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியக் கழகச் செயலாளரும், வாணியம்பாடி எம்.எல்.ஏ. கோவி.சம்பத்குமாரின் மகன் திருமணம்,
11. திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், அனக்காவூர் ஒன்றியக் கழகச் செயலாளரும், வந்தவாசி எம்.எல்.ஏ. செய்யாவூர் குணசீலனின் மகன் திருமணம்,
12. மதுரை புறநகர் மாவட்டம், சோழவந்தான் எம்.எல்.ஏ. கருப்பையாவின் மகள் திருமணம்,
13. வாலாஜா ஒன்றிய இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளரும், திருப்பாற் கடல் ஊராட்சி மன்றத் தலைவருமான தனஞ்செழியனின் திருமணம்,
14.திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கவேலின் மகள் திருமணம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications