தேர்தல் நேரங்களில் மட்டும் தான் ஜெயலலிதா வெளியே வருவார் - பிரகாஷ் ஜவடேகர்
புதுவை: தமிழக முதல்வர் ஜெயலலிதா தேர்தல் நேரங்களில் மட்டும் மக்களை சந்திக்க வெளியே வருவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
புதுச்சேரி மாநில பாஜக இணையதளத்தை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தின் அடையாளமாக விளங்கிய என்.டி.சி பஞ்சாலையை நவீனப்படுத்துவதாக கூறிய காங்கிரஸ், அதற்கு மூடுவிழா நடத்திவிட்டது. 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல் என திமுக-காங்கிரஸ் ஊழல் கூட்டணியாக திகழ்வதாக விமர்சித்தார்.

புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் பேர் வேலை இல்லாமல் தவிப்பதாக தெரிவித்த அவர், வேலை வாய்ப்பை உருவாக்க புதுச்சேரி அரசு தவறிவிட்டதாகவும் குறை கூறினார்.
மக்களை தொடர்ந்து அடிமையாக வைத்திருக்கவே அதிமுக இலவசங்களை அறிவித்துள்ளது. அதிமுக ஆட்சியில் நீங்கள் பெறும் ஒவ்வொரு இலவச பொருட்களுக்கும் பணம் வசூலிக்கப்படுகிறது. ஒரே ஒரு தலைவர் இருக்கும் கட்சிதான் அதிமுக. அதுவும் தேர்தல் நேரங்களில் மட்டும் தான் அவர் வெளியே வருவார் என்றார் பிரகாஷ் ஜவடேகர்.












Click it and Unblock the Notifications