விசாலாட்சி நெடுஞ்செழியனின் மறைவு அதிமுகவிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு- ஜெயலலிதா
விசாலட்சி நெடுஞ்செழியனின் மறைவு அதிமுகவிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுகவின் மூத்த தலைவரும், கட்சியின் அமைப்பு செயலாளருமான விசாலாட்சி நெடுஞ்செழியன் சென்னையில் இன்று காலமானார். உடல்நலக் குறைவு ஏற்பட்டு, கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்தது.
முன்னாள் அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியனின் துணைவியாரான விசாலாட்சி நெடுஞ்செழியன், கட்சி வளர்ச்சிக்காக பல்வேறு நிலைகளில் பாடுபட்டவர். தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

93 வயதாகும் விசாலாட்சி நெடுஞ்செழியன் அதிமுக அமைப்புப் செயலாளராக பதவி வகித்து வந்தார். அவரது மரணத்திற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்து உள்ளார்.
ஜெயலலிதா விடுத்துள்ள இரங்கல் செய்தியில், விசாலட்சி நெடுஞ்செழியனின் மறைவு அதிமுகவிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications