ஜெ. சுயநினைவோடு கைரேகை வைத்தார்... சசிகலா உடனிருந்தார் - டாக்டர் பாலாஜி
வேட்பாளரின் வேட்புமனுவில் ஜெயலலிதா சுயநினைவோடு கைரேகை வைத்தார் என்றும் அப்போது தம்முடன் சசிகலாவும் உடன் இருந்தார் என்றும் டாக்டர் பாலாஜி விசாரணை ஆணையத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: வேட்புமனுவில் கைரேகை வைத்தபோது ஜெயலலிதா சுயநினைவோடு இருந்தார் என்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் டாக்டர் பாலாஜி சாட்சியம் அளித்துள்ளார். ஜெயலலிதா கைரேகை வைத்த போது தாமும், சசிகலாவும் மட்டுமே இருந்ததாக அவர் தெரிவித்தார்.
அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பான படிவத்தில் ஜெயலலிதாவின் கைரேகை இடம் பெற்றிருந்தது.
திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். எம்எல்ஏ போஸின் வேட்பு மனுவில் இடம்பெற்றிருந்த ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பாக டாக்டர் சரவணன் சந்தேகம் எழுப்பி இருந்தார்.

சந்தேகம் எழுப்பிய சரவணன்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு அமைத்த நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரண கமிஷன் இரண்டு வாரங்களுக்கு முன்னர் தனது விசாரணையைத்தொடங்கியுள்ளது.

சுயநினைவோடு இருந்தாரா?
இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விசாரணை ஆணையத்திடமும் இது தொடர்பான ஆவணங்களை சரவணன் அளித்திருந்தார். ஜெயலலிதா சுயநினைவோடு தான் இதில் கைரேகை வைத்தாரா? என்று கேள்வி எழுப்பியிருந்தார் சரவணன் குறிப்பிட்டிருந்தார்.

விளக்கம் சொன்ன டாக்டர் பாலாஜி
இந்நிலையில் மருத்துவர் சரவணனின் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறும் வகையில் ஜெயலலிதாவின் கைரேகைக்கு சான்றளித்த மருத்துவர் பாலாஜி இன்று ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி 3 மணி நேரம் விளக்கம் அளித்தார். கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்ததாக கூறினார்.

உடன் இருந்த சசிகலா
வேட்புமனுவில் ஜெயலிதா கைரேகை வைத்த போது சுயநினைவோடுதான் இருந்தார் என்றும் தான் கைரேகை பெறும் போது சசிகலாவும் தம்முடன் இருந்தார் என்றும் விசாரணை ஆணையத்தில் டாக்டர் பாலாஜி சாட்சியம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கைரேகை ஒப்பிட்டு பார்க்க முடிவு
அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவை அரசு மருத்துவக்குழுவோ, அமைச்சர்களோ பார்க்கவில்லை என்றும் டாக்டர் பாலாஜி தெரிவித்தார். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் பதிவாகியுள்ள ஜெயலலிதாவின் கைரேகையுடன் ஒப்பிட ஆணையம் திட்டமிட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications