ஜெயலலிதா மரணம்: விசாரணை ஆணையத்தில் நவ.22ல் டாக்டர் சரவணன் ஆஜர்
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் குறித்த விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று திமுக மருத்துவரணி நிர்வாகி சரவணனுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி மரணம் அடைந்தார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி மரணம் அடைந்தார்.
அவருடைய மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். விசாரணை ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி நியமிக்கப்பட்டார்.

டாக்டர் சரவணன் பிரமாணபத்திரம்
விசாரணையை தொடங்கிய அவர், ஜெயலலிதா மரணம் தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் தங்களுக்கு தெரிந்த தகவலை தகுந்த ஆவணங்களுடன் அளிக்கலாம் என்று தெரிவித்தார். அதன்படி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பிரமாண பத்திரம் அடங்கிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அறிக்கையில் குளறுபடி
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போசுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கோரும் படிவத்தில், ஜெயலலிதாவின் கைரேகை வைக்கப்பட்டதில் குளறுபடி நடந்திருக்கிறது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கும், மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ அறிக்கைகளுக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளன என்று குறிப்பிட்டு இருந்தார். மனு அளித்த டாக்டர் சரவணனை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க, விசாரணை ஆணையத்தின் தலைவர் ஆறுமுகசாமி சம்மன் அனுப்பியுள்ளார்.

டாக்டர் சரவணனுக்கு சம்மன்
இந்த சூழ்நிலையில் வரும் 22ஆம் தேதி ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை முறைப்படி தொடங்கவுள்ளது. அன்றைய தினத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென, சரவணனுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அதில், "எதிர்வரும் 22ஆம் தேதி விசாரணை ஆணையத்தின் அலுவலகத்தில் நடைபெறும் விசாரணைக்கு ஆஜராகி தாங்கள் பிரமாண பத்திரத்துடன் தாக்கல் செய்துள்ள ஆவணங்களின் மூல ஆவணங்களை கொண்டுவந்து இந்த விசாரணை சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு கோரப்படுகிறீர்கள். குறிப்பிட்ட நாளில் ஆஜராக தவறினால் தாங்கள் இல்லாமலேயே ஆணையம், விசாரணையை மேற்கொண்டு முடிவு செய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கைரேகை சர்ச்சை வழக்கு
திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட மருத்துவர் சரவணன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸின் வெற்றியை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில் அதிமுக வேட்பாளரின் உறுதிமொழிப் படிவத்தில் இடப்பட்ட ஜெயலலிதா கைரேகை தொடர்பாக பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பி இருந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications