ஜெயலலிதா மரண மர்மம்: நீதிபதி ஆறுமுகசாமி நாளை விசாரணை தொடக்கம்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் மைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷன் நாளை விசாரணையை தொடங்குகிறது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக, விசாரணை ஆணையம் அமைத்துள்ளதாக தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்த விசாரணை கமிஷனின் விசாரணை நாளை முதல் தொடங்க உள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் 75 நாள்கள் சிகிச்சைபெற்றுவந்த அவர், டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அதிக மர்மங்கள் இருப்பதாகவும், அதுகுறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. ஜெயலலிதா மறைவுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கோரிக்கை வைத்திருந்தார். இதற்காக தர்மயுத்தமே நடத்தினார் ஓ.பன்னீர் செல்வம்.
இரு அணிகளும் இணையும் முன்பாக ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கப்படும் என்று கூறினார். விசாரிப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்
விசாரணை நடைபெறும் அலுவலகம் சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அலுவலகத்துக்கு கடந்த வாரம் நீதிபதி ஆறுமுகசாமி நேரில் பார்வையிட்டார்.
விசாரணை நடைபெறும் போது பேசும் உரையாடல் வெளியில் கேட்க கூடாது என்பதற்காக சிறப்பு வடிவமைப்புடன் அறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. அலுவலகம் அமைக்கும் பணி முடிந்து விட்டதால் நீதிபதி ஆறுமுகசாமி நாளை தனது விசாரணையை தொடங்குகிறார்.
இந்த விசாரணை கமிஷனின் விசாரணை, இன்னும் மூன்று மாத காலத்துக்குள் முடிக்க வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications