ஜெயலலிதா மரணத்தில் சசிகலா சதி.. ஓபிஎஸ் கபட நாடகம்.. தீபா சொல்ல வருவது என்ன?
ஜெயலலிதா மரணம் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நாடகமாடுகிறார் என்று தீபா தெரிவித்துள்ளார். அப்படியானால் என்ன நடந்தது என்று தீபா பொதுமக்களுக்கு விளக்க வேண்டும்.
சென்னை: ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று பரபரப்பான குற்றச்சாட்டுகள் எழுந்த போது அவரது மரணத்தில் தனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை என்று கூறினார் தீபா. ஆனால், தற்போ ஜெயலலிதா மரணத்தில் ஓபிஎஸ் நாடகமாடுகிறார் என்றால் தீபாவிற்கு தெரிந்த உண்மை வெளியுலகத்திற்கு வர வேண்டும்.
கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி ஜெயலலிதா 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் இறந்தார். இதில் மர்மம் இருப்பதாக ஓபிஎஸ் தரப்பினர் கடுமையான குற்றச்சாட்டுக்களை சசிகலா மீது வைத்தனர்.
இதுகுறித்து தீபா செய்தியாளர்களிடம் பேசியபோது, ஜெயலலிதா மரணத்தில் தனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்று ஆணித்தரமாக தெரிவித்தார். ஏனென்றால் தனது அண்ணன் தீபக், ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த போது மருத்துவமனையில் உடன் இருந்தார் என்ற காரணத்தையும் கூறினார்.

குற்றச்சாட்டு
இந்நிலையில், ஆர்.கே. நகர் தொகுதியில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தீபா ஆர்.கே.நகர் தொகுதி தண்டையார்பேட்டையில் எம்.ஜி.ஆர் - அம்மா, தீபா பேரவை தேர்தல் பணிமனையை திறந்து வைத்து ஜெயலலிதா மரணம் குறித்து பேசியிருக்கிறார்.

கபட நாடகம்
அதில், டிடிவி தினகரனும், மதுசூதனனும் மக்களை ஏமாற்றி வருவதாகவும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கபட நாடகமாடுவதாகவும் தீபா கூறியுள்ளார். இதனால் ஜெயலலிதாவின் மரணத்தில் மேலும் சந்தேகம் எழுந்துள்ளது.

திசை திருப்ப..
ஜெயலலிதா எம்எல்ஏவாக இருந்த தொகுதியில் தேர்தல் நேரத்தில் தீபா ஜெயலலிதா மரணம் குறித்து பேச வேண்டிய அவசியம் என்ன? ஜெயலலிதா மரணத்தில் சந்தேகமே இல்லை என்று சொன்ன தீபா, திடுதிப்பென்று ஓபிஎஸ் நாடகம் ஆடுகிறார் என்று ஆர்.கே. நகர் தொகுதியில் பிரச்சாரத்தின் போது பேசுவது என்பது வாக்காளர்களை ஏமாற்றவே என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உண்மை என்ன?
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம்தான் என்ன என்று தமிழக மக்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்துள்ள நிலையில், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை தீபா விளக்க வேண்டும். அப்போதுதான் இதில் சசிகலா பங்கு என்ன? ஓபிஎஸ்ஸின் பங்கு என்ன? என்பது தெரிய வரும்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications