தமிழக அமைச்சரவையில் இருந்து மாதவரம் மூர்த்தி டிஸ்மிஸ்! மீண்டும் அமைச்சரானார் ரமணா!!

Subscribe to Oneindia Tamil

Jayalalithaa dismisses Madhavaram Moorthy from cabinet
சென்னை: தமிழக பால்வளத்துறை அமைச்சர் மாதவரம் மூர்த்தி இன்று திடீரென டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ. ரமணா மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில் தேர்தல் பணிகளை சரியாக மேற்கொள்ளாததால் அமைச்சர்களாக இருந்த ரமணா, பச்சைமால், தாமோதரன் ஆகியோர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். முன்னாள் அமைச்சர்களான கோகுல இந்திரா, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேலுமணி ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

பின்னர் திருவள்ளூர் மாவட்ட அதிமுகவில் நேற்று அதிரடியாக சில மாற்றங்கள் செய்யப்பட்டன. திருவள்ளூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் இருந்து மாதவரம் மூர்த்தி நீக்கப்பட்டார்.

அத்துடன் திருவள்ளூர் வடக்கு, திருவள்ளூர் தெற்கு என செயல்பட்டு வரும் அதிமுக அமைப்புகள் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், திருவள்ளுர் மேற்கு மாவட்டம் என பிரிக்கப்பட்டு திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக பி.வி. ரமணா நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் மேலும் ஒரு அதிரடியாக மாதவரம் மூர்த்தியின் அமைச்சர் பதவியும் இன்று பறிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதில் பால்வளத்துறை அமைச்சராக பி.வி. ரமணா மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+