7 மணிக்கு ஆரம்பித்து.... சில நிமிடங்களில் முடிந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
சென்னை: அண்ணா தி.மு.க. சட்டசபை கட்சித் தலைவராக அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதாவை அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் ஒருமனதாக தேர்ந்தெடுத்துள்ளனர். இதையடுத்து ஆளுநர் ரோசையாவை சந்தித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் இதற்கான கடிதத்தைக் கொடுக்க உள்ளனர். இதன் பின் தமிழக முதல்வராக ஜெயலலிதா நாளை பிற்பகல் பதவியேற்க உள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவை கர்நாடகா உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வராக மீண்டும் ஜெயலலிதா பதவியேற்பதற்காக நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இதன் முதல் கட்டமாக இன்று காலை அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டை அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகத்தில் காலை 7 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அண்ணா தி.மு.க.வின் சட்டசபை கட்சித் தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு சில நிமிடங்களே இக்கூட்டம் நடைபெற்றது.
இதில் முதல்வர் பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள் உட்பட 142 அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர். தே.மு.தி.க.வின் 5 அதிருப்தி எம்.எல்.ஏக்களும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் சட்டசபை அதிமுக கட்சித் தலைவராக ஜெயலலிதா பெயரை முதல்வர் பன்னீர்செல்வம் முன்மொழிய மூத்த அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அதனை வழிமொழிந்தார். பின்னர் ஒருமனதாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டசபை அ.தி.மு.க. தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்படும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன் கூட்டம் முடிவடைந்தது. இத்தீர்மானத்துடன் போயஸ் தோட்டம் சென்ற முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தீர்மானத்தைக் கொடுத்தனர்.

இதன் பின்னர் கடந்த 7 மாதங்களாக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை பதவி விலகியது.
அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம், ஜெயலலிதா பதவியேற்பு உள்ளிட்டவைகளுக்காக சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications