அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்ததும் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்: ஜெயலலிதா வாக்குறுதி
சென்னை: தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தும் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா சற்றுமுன் சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கூறினார்.
சென்னை தீவுத் திடலில் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். போயஸ் தோட்டத்தில் இருந்து தீவுத் திடலுக்கு கிளம்பிய ஜெயலலிதாவிற்கு வழி நெடுகிலும் காத்திருந்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜெயலலிதாவின் பிரச்சாரத்தை கேட்பதற்காக பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் தீவுத்திடலில் குவிந்துள்ளனர்.

கூட்டத்தில் ஜெயலலிதா பேசியதாவது: மதுவிலக்கு குறித்து தீவிரமாக ஆராய்ந்துதான் ஒரு முடிவுக்கு வர முடியும் என்பதால் அதுகுறித்து பேசாமல் இருந்தேன். அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்ததும் படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றார்.

மேலும், மதுவிலக்கை ஒரே கையெழுத்தில், ஒரே நாளில் கொண்டு வந்துவிட முடியாது. மதுக்கடைகள் திறக்கும் நேரம், மூடும் நேரம் குறைக்கப்படும். சில்லறை மது விற்பனைக் கடைகள் நேரம் குறைக்கப்படும். பார்கள் மூடப்படும், மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அடைவோம். மதுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஜெயலலிதா.
-
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications