புதுவையில் ஜெயலலிதா இன்று பிரசாரம்: 30 வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்
சென்னை: புதுச்சேரியில் இன்று நடைபெறும் அதிமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று முதல்வர் ஜெயலலிதா 30 வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார்.
தமிழகம் மற்றும் புதுவையில் சட்டசபைத் தேர்தல் மே 16ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். சட்டசபைத் தேர்தலில் அதிமுக 227 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதன் கூட்டணி கட்சிகள் 7 தொகுதிகளில் களம் காண்கிறது.

234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் அதிமுகவினரும் கூட்டணி கட்சி வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். அதிமுக வேட்பாளர்கள்-கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் புதுவையில் அதிமுக சார்பில் போட்டியிடும் 30 தொகுதிகளுக்கான வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் புதுச்சேரி உப்பளத்தில் உள்ள பழைய துறைமுக மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா கலந்துகொள்கிறார். உப்பளம் துறைமுக மைதானத்துக்கு பிற்பகல் 3 மணிக்கு மேல் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் வருவார் என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
முதல்வர் ஜெயலலிதா வருகையை முன்னிட்டு புதுச்சேரி பழைய துறைமுகம் மைதானத்தில் நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்தும் சிறப்பு போலீஸ் படையினர் வந்து விழா நடைபெறும் மேடை, இடத்தின் தன்மை குறித்து ஆய்வு செய்துள்ளனர்.
மேலும் வெடிகுண்டு, நிபுணர்களும் விழா நடைபெறும் இடத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதிமுக பொதுக்கூட்டத்தை முன்னிட்டு வாகனங்கள் நிறுத்தும் இடங்களையும் போலீஸார் அறிவித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications