பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு நாளை அண்ணா விருது வழங்குகிறார் ஜெயலலிதா
சென்னை: தேமுதிகவை விட்டு வெளியேறிய பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு தமிழக அரசின் அண்ணா விருதை நாளை முதல்வர் ஜெயலலிதா வழங்க உள்ளார்.
தலைவர்கள் பெயரில் தமிழக அரசு பல்வேறு விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது தைவான் நாட்டைச் சேர்ந்த தமிழ் அறிஞர் யூசிக்கு வழங்கப்பட்டது. திருவள்ளுவர் தினமான ஜனவரி 15-ந்தேதி சென்னையில் நடந்த விழாவில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அதை வழங்கினார்.
இது தவிர தந்தை பெரியார் விருது, பேரறிஞர் அண்ணா விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, பெருந்தலைவர் காமராஜர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, திரு.வி.க. விருது, கி.ஆ.பெ.விசுவநாதம் விருதுகளை பெறுவோர் பெயர்களையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

பெரியார் விருது சுலோசனா சம்பத்துக்கும், அண்ணா விருது பண்ருட்டி ராமச்சந்திரனுக்கும், அம்பேத்கார் விருது பேராயர் பிரகாஷ்க்கும், காமராஜர் விருது அய்யாறு வாண்டையாருக்கும் வழங்கப்பட உள்ளது.
பாரதியார் விருதை முனைவர் கு.ஞான சம்பந்தன், பாரதிதாசன் விருதை முனைவர் ராதா செல்வலப்பன், திரு.வி.க. விருதை ஜெ.அசோகமித்ரன், கி.ஆ.பெ. விசுவநாதம் விருதை முனைவர் வ.ஜெயதேவன் ஆகியோரும் பெறுகிறார்கள்.
தமிழக அரசின் விருதுகளை வழங்கும் விழா சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை காலை நடைபெறுகிறது. இந்த விருதுகளை பண்ருட்டி ராமச்சந்திரன் உள்பட 8 பேருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்குகிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications