விபத்தில் பலியான விமானிகள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம்... முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்
சென்னை : டோர்னியர் விமான விபத்தில் உயிரிழந்த 3 விமானிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியை முதல்வர் ஜெயலலிதா இன்று வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது...

''கடலோர காவல்படையைச் சேர்ந்த இளம் வீரர்களான வித்யாசாகர், எம்.கே.சோனி மற்றும் சுபாஷ் சுரேஷ் ஆகியோர் கடந்த ஜூன் 8-ம் தேதி ‘டோர்னியர்' ரக விமானத்தில் கண்காணிப்பு ஒத்திகையில் ஈடுபட்டிருந்தபோது விமானத்துடன் காணாமல் போயினர். நீண்ட தேடுதலுக்குப் பிறகு வீரர்களின் எலும்புகள் கடலுக்கடியில் இருந்து மீட்கப்பட்டன. உரிய பரிசோதனைகளின் மூலம், 3 வீரர்களின் மரணம் உறுதி செய்யப்பட்டது.
இதை அறிந்த முதல்வர் ஜெயலலிதா, உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி, வீரர்களின் குடும்பத்தினரிடம் தலா ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் ஜெயலலிதா இன்று வழங்கினார்.

எம்.கே.சோனியின் மனைவி அம்ருதா சோனி, சுபாஷ் சுரேஷ் மனைவி தீபலட்சுமி ரவிச்சந்திரன், வித்யாசாகர் மனைவி டி.சுஷ்மா சார்பில் கமாண்டன்ட் சந்திர மவுலி மற்றும் கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் எஸ்.பி.ஷர்மான் ஆகியோர் நிதியை பெற்றுக்கொண்டனர். பின்னர், முதல்வருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்''
இவ்வாறு தமிழக அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications