ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் - பொன்னையன் பேட்டி
சென்னை: முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என அதிமுக மூத்த தலைவரும் செய்தித் தொடர்பாளருமான பொன்னையன் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, தொடர்ந்து 15-வது நாளாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து மருத்துவ குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனிடையே இன்று மாலை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஒரு அறிக்கை வெளியானது. அதில், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்கி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் உடன் எய்ம்ஸ் மருத்துவர்களும் சிகிச்சை அளித்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், முதல்வர் ஜெயலலிதா நீண்ட நாள் மருத்துவமனையில் தங்க வேண்டியிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பொன்னையன், முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என தெரிவித்தார்.
மேலும் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் குழு முதல்வருக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வருகின்றனர். முதல்வர் மருத்துவமனையில் மேலும் ஓய்வெடுக்க அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications