நாளை கொடநாடு செல்கிறார் முதல்வர் ஜெ.
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா நாளை கொடநாடு எஸ்டேட்டுக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏற்பாடுகள் தொடங்குவதற்கு முன்னர் முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் தங்கியிருந்தபடியே அரசுப் பணிகளைக் கவனித்து வந்தார்.

அதன் பின்னர் தேர்தல் பணிகளுக்காக சென்னை திரும்பினார். தற்போது தேர்தல் முடிவடைந்து விட்ட நிலையில் மீண்டும் வரும் நாளை கொடநாடு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னையிலிருந்து நாளை காலை தனி விமானத்தில் கோவைக்கு செல்லும் முதல்வர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக கொடநாட்டுக்குச் செல்கிறார். மே 16-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்னர் வரை அங்கு தங்கியிருப்பார் எனத் தெரிகிறது.
தேர்தல் முடிந்து கொடநாட்டுக்கு செல்லும் முதல்வரை வரவேற்க நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications