வீடியோ கான்பரன்சிங் மூலம் ரூ.111 கோடி மதிப்பிலான கட்டிங்களை திறந்து வைத்த ஜெ.
சென்னை: தமிழகத்தில் ரூ.111 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
தஞ்சையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகக் கட்டிடம் ரூ.30 கோடியே 46 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. 3 தளங்கள், 219 அறைகள், 4 கூட்ட அரங்குகள் கொண்ட அந்த கட்டிடத்தை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.

இது தவிர கடலூரில் ரூ.24 கோடியே 41 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகக் கட்டிடம், தூத்துக்குடியில் ரூ. 42 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்பு, தாம்பரத்தில் ரூ. 1 கோடியே 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், ஸ்ரீரங்கத்தில் ரூ. 2 கோடியே 15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு,
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ. 31 கோடியே 73 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 15 வட்டாட்சியர் அலுவலகக் கட்டிடங்கள், அந்தியூர் மற்றும் சின்னசேலத்தில் ரூ. 4 கோடியே 25 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகளையும் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
மேலும் ரூ. 92 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 7 குடியிருப்புகளுடன் கூடிய வருவாய் ஆய்வாளர் அலுவலகக் கட்டிடங்கள், ரூ. 4 கோடியே 60 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 65 கிராம நிர்வாக அலுவலர் அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகள், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ரூ. 1 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பதிவறை கட்டிடங்களை அவர் திறந்து வைத்தார்.
மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நில அளவை மற்றும் நிலவரித் திட்டத் துறையின் குறுவட்ட அளவர்களுக்கு ரூ. 10 கோடியே 16 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 80 குடியிருப்புகளுடன் கூடிய அலுவலகக் கட்டிடங்கள் உள்பட பல்வேறு கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications