கேபிள் டிவியில் ஜெயலலிதா நடித்த படங்களை காண்பிக்க கூடாது: ஹைகோர்ட்டில் வழக்கு

Subscribe to Oneindia Tamil

மதுரை: கேபிள் டிவியில் ஜெயலலிதா நடித்த திரைப்படங்களை காண்பிப்பதற்கும், அரசு அலுவலகங்களில் அவரது படத்தை வைத்திருப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து மதுரை மாவட்ட பார் அசோசியேசன் இணைச் செயலாளர் கருணாநிதி மதுரை ஹைகோர்ட் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: அரசு அலுவலங்களில் குடியரசு தலைவர், பிரதமர், முதல்வர் உட்பட 12 பேர் படங்கள் இடம்பெறலாம் என விதி உள்ளது. ஆனால் சொத்து குவிப்பு குற்றச்சாட்டில் தீர்ப்பு பெற்று செப்டம்பர் 27ம்தேதி முதல் முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதாவின் படமும் தமிழக அரசு அலுவலகங்களில் இடம் பெற்றுள்ளது.

Jayalalithaa photos in government offices: plea in High court

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படங்கள், அவர் ஒரு வழக்கில் தண்டனை பெற்ற பின்பும், அரசு அலுவலங்களிலல் அகற்றப்படாமல் உள்ளதில் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன?

புகைப்படம் வைப்பது தொடர்பான அரசு உத்தரவுகளை, தற்போதைய தமிழக அரசு கடைபிடிக்கவில்லை. இதுகுறித்து அரசு தரப்புக்கு மனு கொடுத்தேன். நடவடிக்கை இல்லை.

எனவே இதில் கோர்ட் தலையிட்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படங்களை அரசு அலுவலகம், திட்டங்களில் இருந்து அகற்ற வேண்டும் என மேற்கண்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். கேபிள் மூலம் ஒளிபரப்பாகும் படங்களையும் நிறுத்த வேண்டும். இவ்வாறு தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி தனபாலன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தனபாலன், இந்த மனு தொடர்பாக தமிழக அரசு இரண்டு வார காலத்தில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ் வாதாடினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+