கச்சத்தீவு விவகாரம்... கருணாநிதிக்கு ஜெ. முன்வைத்த 7 கேள்விகள்
சென்னை: கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி தம்முடைய 7 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு இன்று முதல்வர் ஜெயலலிதா பதிலளித்தார். அப்போது கச்சத்தீவு விவகாரம் குறித்து ஜெயலலிதா பேசியதாவது:
1974ம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது பற்றியும், அதனைத் தடுக்க கருணாநிதி தவறி விட்டது பற்றியும் விரிவாக நான் இந்த மாமன்றத்தில் 20.6.2016 அன்று எடுத்துக் கூறினேன்.
21.6.2016 அன்று கருணாநிதி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கச்சத்தீவை தாரை வார்க்க தான் எந்த காலத்திலும் ஒப்புக் கொண்டதும் இல்லை, உடன்பட்டதும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
2013ம் ஆண்டு மே மாதம் டெசோ அமைப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நான் கேட்கும் கேள்விகள் என்னவென்றால்...

தாரைவார்க்க ஒப்புதல்தானே?
1974ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி திடீரென்று அறிவிப்பு வந்தவுடன் தான் அது பற்றி தெரியும் என்று சொன்னதும், 15.4.2013 அன்று டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் திமுக அரசு வலியுறுத்தி தான் சில ஷரத்துகள் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டன என்று கூறுவதும், ஒன்றுக்கொன்று முரண்பாடானதில்லையா? சில ஷரத்துகள் சேர்க்கும்படி சொல்லப்பட்டது என்றாலே, தாரை வார்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டது என்பது தானே பொருள்?

இந்திராவின் சமாதானம் ஏற்பு
அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி சமாதானம் செய்து பல உரிமைகளுக்கு வழி வகுக்கப்பட்டன என்று தனது அறிக்கையில் கருணாநிதி கூறியிருப்பதிலிருந்தே, கச்சத்தீவு தாரை வார்ப்பதற்கு அவர் ஒப்புக் கொண்டார் என்று தானே பொருள் ?

ஏன் வழக்கு போடலை?
ஜன சங்கத் தலைவர் வாஜ்பாய் இது பற்றி வழக்குப் போடப்படும் என்று தெரிவித்தும், தமிழக அரசு ஏன் எந்த வழக்கையும் அப்போது தாக்கல் செய்யவில்லை?

அரசியல் காரணங்களால்தானே..
2008ம் ஆண்டு தனிப்பட்ட முறையில் உச்ச நீதிமன்றத்தில் நான் வழக்கு தாக்கல் செய்து, அதன் பின்னர், 2011ஆம் ஆண்டு, என்னால் சட்டப் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தமிழக அரசும் அதில் தன்னை இணைத்துக் கொண்ட பின், தி.மு.க.வால் அரசியல் காரணங்கள் மற்றும் 2014ம் ஆண்டைய நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து தானே 10.5.2013 அன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது?

ஏன் பதில் மனு தாக்கல் செய்யலை?
என்னால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பேரில், உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய போது, கருணாநிதியின் தலைமையிலான அப்போதைய தமிழக அரசு ஏன் கச்சத் தீவை தாரை வார்த்தது தவறு என பதில் மனு தாக்கல் செய்யவில்லை?

ஒப்பந்தத்தில் அப்படி இல்லையே?
அப்போதைய திமுக அரசு வலியுறுத்தியதால் தான் கச்சத் தீவுப் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமை, மீனவர்களின் வலைகளை அங்கே உலர்த்திக் கொள்வதற்கான உரிமை, 1974ம் ஆண்டு ஒப்பந்த ஷரத்துகளில் சேர்க்கப்பட்டன என்பது உண்மைக்கு மாறான கருத்தல்லவா? ஏனெனில், இது போன்ற எந்த ஷரத்தும் 1974-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் இல்லையே? இவற்றுக்கெல்லாம் திமுக தலைவர் கருணாநிதி பதில் கூறுவாரா?
இவ்வாறு ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications