For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆக.15 முதல் 5 கி.மீ.க்கு 1 மதுபான கடைதானாம்...பார்கள் அடியோடு குளோசாம்.. வலம் வரும் 'வைரல்' தகவல்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சுதந்திர தினம் முதல் தமிழகத்தில் சுமார் 2,000 மதுக்கடைகள் வரை மூடப்பட்டு 5 கி.மீட்டருக்கு 1 மதுபான கடை என்ற நிலை உருவாக்கப்படும்; பார்கள் ஒட்டுமொத்தமாக மூடப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கக் கூடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் செய்தி இது:

ஆகஸ்ட் 15 தேதி சுதந்திர தினத்தன்று சுமார் 1000 முதல் 2000 மதுக்கடைகளை குறைக்க முதலமைச்சர் ஜெயலலிதா கையெழுத்திட்டுள்ளார். இனி 5 கிலோ மீட்டருக்கு ஒரு கடை என்றவீதத்தில் மதுக்கடைகள் இருக்கும்படி உள்ள ஆணை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார்.

Jayalalithaa ready to shut down of 2,000 TASMAC shops?

இதன் மூலம் மதுவிலக்கின் முதல் படியான கடைகள் குறைப்பினை கையில் எடுத்துள்ளார். இது எல்லாம் போதாது என்று நினைக்கும் முதல்வர், வரும் ஆகஸ்ட் 16 முதல் மதுக்கடைகளை பகல் 2 மணி முதல் இரவு 9.30 மணி வரை இயக்க உத்தரவு பிறப்பிக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் அனைத்து வகையான பார்களையும் இழுத்து மூடவும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவை எல்லாவற்றையும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று முதல்வர்அறிவிக்க உள்ளார் என்று தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.

இப்படியாக அந்த செய்தி பரவி வருகிறது!

ஏற்கனவே முதல் கட்டமாக 500 மதுபானக் கடைகள் மூடப்பட்டு கடை திறப்பு நேரம் குறைக்கப்பட்டு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நல்லது நடக்கட்டும்!

English summary
Sources said that, Tamilnadu CM Jayalalithaa may announce the shut down of 2,000 more TASMAC Shops.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X