ஜெயலலிதாவிற்கு 2 குழந்தைகள் பிறந்தது... அண்ணன் வாசுதேவன் பகீர் தகவல்
ஜெயலலிதாவிற்கு 2 குழந்தைகள் பிறந்தது என்று அவரது அண்ணன் வாசுதேவன் அதிர்ச்சிகரமான தகவலை கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: ஜெயலலிதாவிற்கும் சோபன்பாபுவிற்கும் குழந்தை பிறந்தது உண்மை என்றும் ஹைதராபாத்தில் வைத்து காப்பாற்றினார்கள், வெளிநாட்டில் திருமணம் செய்து கொடுத்து விட்டார்கள் என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் என அழைத்துக் கொள்ளும் வாசுதேவன் கூறியுள்ளார்.
வாசுதேவன், மைசூரு மாவட்டம் டி.நரசிபுரா தாலுகாவிலுள்ள ஸ்ரீரங்கபுராவில் வசித்து வருகிறார். எனது தந்தையின் இரண்டாவது மனைவியின் மகளாக இருந்தாலும் நான் ஜெயலலிதாவை சொந்த தங்கையாகவே நினைத்தேன் என்று கடந்த ஆண்டு ஜெயலலிதா மரணமடைந்த போது கூறினார் வாசுதேவன்.
தற்போது ஜெயலலிதாவின் மகள் நான்தான் என்று வழக்கு தொடர்ந்துள்ளார் அம்ருதா. இதற்கு ஜெயலலிதாவின் உறவினர்களான ரஞ்சனி, லலிதாவும் உதவி வருகின்றனர். இந்த நிலையில் சன் நியூஸ் டிவி சேனலுக்குப் பேட்டியளித்துள்ள வாசுதேவன், இரண்டு குழந்தைகள் ஜெயலலிதாவிற்கு பிறந்ததாக கூறியுள்ளார்.
திருமணம் முடித்து வைத்த ஜெயலலிதா
அந்த பேட்டியில், ஜெயலலிதாவிற்கும் சோபன்பாபுவிற்கும் குழந்தை பிறந்தது உண்மைதான்; ஹைதராபாத்தில் வைத்து காப்பாற்றினார்கள். ஜெயலலிதாதான் திருமணம் செய்து வைத்தார். அந்த குழந்தை எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார் வாசுதேவன்.

யாருடனும் தொடர்பு இல்லை
மேலும், ஜெயலலிதாவிற்கு சென்னையில் பிரசவம் பார்த்தார்கள் என்று சொல்லுவது தவறான தகவல்; ஏனென்றால் ஜெயலலிதா எங்கள் குடும்ப உறுப்பினர்கள் யாரோடும் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை.

சொத்துக்களுக்கு வாரிசு
ஜெயலலிதாவிற்கு சோபன்பாபு மூலம் குழந்தை பிறந்தது என்று சசிகலாவிற்கும், நடராசனுக்கும் நிச்சயம் தெரியும். இப்போது தீபா, தீபக், நானும்தான் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு வாரிசு என்றும் வாசுதேவன் கூறினார்.

தீபா பேசமாட்டார்
தனது தம்பி மகளான தீபா தற்போது தன்னுடன் பேசுவதில்லை என்றும் வாசுதேவன் கூறியுள்ளார். கடந்த ஆண்டு இதே நாளில் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்தும், அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது பற்றியும் பரபரப்பான செய்தி வெளியானது. இந்த ஆண்டு அவருக்கு குழந்தை இருந்தது உண்மையா? அதுவும் 2 குழந்தைகளா? என்றும் பரபரப்பாக பேசி வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications