ஓபிஎஸ் அண்ணன் அதிமுகவிற்கு மீண்டும் திரும்ப வேண்டும் - ஜெ., அண்ணன் மகன் தீபக்
அதிமுக தலைமைக்கு தகுதியானவர் ஓபிஎஸ் மட்டுமே என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கூறியுள்ளார். ஓபிஎஸ் அதிமுகவிற்கு திரும்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை: ஓபிஎஸ் மட்டுமே அதிமுக தலைமைக்கு தகுதியானவர் என்றும் அவர் அதிமுகவிற்கு திரும்ப வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் அழைப்பு விடுத்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள தீபக், இன்று ஓ.பன்னீர் செல்வத்தை வாய் நிறைய அண்ணன் என்று அழைத்தார். டிடிவி தினகரன் நல்லவராகவே இருந்தாலும் அவர் கட்சியை வழி நடத்த தகுதியானவர் அல்ல என்றார்.

எங்க கட்சியில நாங்க அண்ணன் தம்பிகள், நாங்கள் அடித்துகொள்வோம் சேர்ந்து கொள்வோம் என்றும் தீபக் கூறினார். மூன்று முறை முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் கட்சியை வழிநடத்த தகுதியானவர் என்று கூறிய தீபக், அவர் அதிமுகவிற்கு திரும்ப வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்த நிலையில் திடீரென்று இன்று தீபக், அதிமுகவிற்கு ஓபிஎஸ் திரும்ப வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications